இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி புதிய கேப்டன் ருதுராஜ் தலைமையில் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் வெளியேறியது. 14 போட்டிகளில் 7 போட்டிகளை வென்ற பொழுதும் ரன் ரேட் இல்லாத காரணத்தினால் வெளியேற வேண்டி இருந்தது. இந்த நிலையில் சிஎஸ்கே அணி நிர்வாகம் 2 பொறுப்புகளுக்கு முன்னாள் தமிழக வீரரை கொண்டு வந்திருக்கிறது.
அடுத்த வருடம் மெகா ஏலம் நடைபெற இருக்கிறது. ஏலத்திற்கு முன்பாக நான்கு வீரர்களை மட்டுமே தக்க வைத்துக்கொள்ள முடியும் என்று தெரிகிறது. மேலும் தோனி விளையாடுவாரா? என்பது குறித்தும் தெரியவில்லை. இதன் காரணமாக சிஎஸ்கே அணி நிர்வாகத்திற்கு சில தேவைகள் உருவாகி இருக்கிறது.
சிஎஸ்கே அணி தோனி இல்லாமல் விளையாட வேண்டிய காலகட்டத்தின் ஆரம்பத்தில் இருக்கிறது. எனவே இங்கிருந்து ஒரு புதிய அணியை உருவாக்க வேண்டிய தேவை இருக்கிறது. இந்த நிலையில் அடுத்த வருடம் மெகா ஏலம் நடக்க இருக்கின்ற காரணத்தினால், உள்நாட்டிலிருந்து திறமையான இளம் வீரர்களை கண்டறிய சிஎஸ்கே நிர்வாகம் விரும்புகிறது.
இதற்காக முன்னாள் தமிழக வீரர் மற்றும் சிஎஸ்கே அணிக்காக விளையாடிய வித்யூத் சிவராமகிருஷ்ணனை திறமை கண்டறியும் குழுவில் சிஎஸ்கே அணி நிர்வாகம் ஒரு வருடத்திற்கு இணைத்து இருக்கிறது. இது மட்டும் இல்லாமல் சிஎஸ்கே அகாடமியின் உயர் செயல்திறன் பயிற்சியாளர் பொறுப்பிலும் அவரை நியமித்திருக்கிறது.
இதுகுறித்து அவர் கூறும் பொழுது “நிச்சயமாக ஐபிஎல் மெகா ஏலம் நடக்க இருக்கிறது. எனவே எதிர்காலத்தில் சிஎஸ்கே அணிக்கு சிறப்பாக செயல்பட முடியும் வீரர்களை கண்டறிய முடியுமா? என்று பார்க்க முயற்சிப்போம். இந்த ஆண்டின் இறுதியில் ஏலத்திற்கு முன்பாக நான்கைந்து டி20 போட்டிகள் இருக்கும்.
இதையும் படிங்க : நாங்க எப்படி இருந்த ஆளுங்க தெரியுமா.. எங்களை பப்ளிக் பூங்காவில் விட்டுட்டாங்க – டிராவிட் வருத்தம்
இந்த நிலையில் அந்த போட்டிகளை நான் சென்று பார்ப்பேன். மேலும் அதில் விளையாடக்கூடிய தேவையான வீரர்கள் பற்றிய அறிக்கைகளைத் தருவேன். அதில் சிஎஸ்கே நிர்வாகம் யார் சிறந்தவர்கள் என்பது குறித்து பார்க்கும். இதுதான் சிறந்த ஒன்றாக இருக்கும்” என்று அவர் கூறியிருக்கிறார்.