இந்திய கிரிக்கெட்டில் இதுவரை உருவாகி வந்த விக்கெட் கீப்பர்களில் விக்கெட் கீப்பராக மிகச்சிறந்தவர் பெங்காலி சேர்ந்த விர்த்திமான் சஹா. தற்போது அவர் மீண்டும் தன்னுடைய சொந்த மாநில அணியான பெங்கால் அணிக்கு உள்நாட்டு கிரிக்கெட்டுக்கு திரும்பி இருக்கிறார். தன்னைத் திருப்பி கூட்டி வந்தது யார் என்பது குறித்து கூறியிருக்கிறார்.
உலகின் எந்த மாதிரியான ஆடுகளமாக இருந்தாலும், என்ன மாதிரியான சூழ்நிலையாக இருந்தாலும், ஸ்டெம்புகளுக்கு பின்னால் விக்கெட் கீப்பிங் இல் மிகச் சிறப்பாக செயல்பட்ட தலைசிறந்தவர்களில் இந்தியாவின் விர்த்திமான் சஹாவுக்கு மிக முக்கியமான இடம் உண்டு. அவருடைய விக்கெட் கீப்பிங் தொழில்நுட்பம் மிகவும் ஆச்சரியப்படுத்த கூடியது.
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட்டில் அவருக்கான இடம் இல்லை என உறுதியாக தெரிந்த பிறகு உள்நாட்டு கிரிக்கெட்டுக்கு சென்று மனம் தளராமல் விளையாடினார். தன்னுடைய சொந்த அணியான பெங்கால் அணியை விட்டு திரிபுரா அணிக்காக இரண்டு வருடங்களாக விளையாடி வருகிறார். இந்த நிலையில் மீண்டும் இந்த ஆண்டு உள்நாட்டு சீசனுக்கு பெங்கால் அணிக்கு திரும்புகிறார்.
இதுகுறித்து விர்த்திமான் சஹா பேசும் பொழுது ” நான் திரிபுரா மாநில அணிக்காக விளையாட இரண்டு வருடங்கள் சென்று விட்டேன். தற்போது நான் மீண்டும் உள்நாட்டு சீசனில் பெங்கால் அணிக்கு திரும்ப வந்ததற்கு சவுரவ் கங்குலி, சினேகாசிஷ் கங்குலி மற்றும் என்னுடைய மனைவி ஆகியோர் முக்கிய காரணமாக இருக்கிறார்கள்.
நான் என்னுடைய அணிக்கு பங்களிக்க விரும்புகிறேன். மேலும் இதற்காக நான் கடுமையாக உழைத்து வருகிறேன். பெங்கால் கிரிக்கெட் அசோசியேஷன் எனக்கு எந்த ரோல் கொடுத்தாலும் நான் அணிக்காக சிறப்பாக பங்களிப்பு செய்ய வேண்டும் என்பதே என்னுடைய கனவாக இருந்து வந்தது. வங்காளத்தை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்பதிலிருந்துதான் எல்லாமே துவங்கியது.
பெங்கால் புரோ டி20 லீக் தொடங்கியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இதில் வீரர்கள் விளையாடுவதற்கான வாய்ப்பை பெறுவதோடு பண பாதுகாப்பையும் பெறுகிறார்கள். இதில் நன்றாக செயல்பட்டால் அவர்கள் மாநிலத்திற்காக விளையாடும் வாய்ப்பையும் பெறுவார்கள். நீண்ட காலமாக இந்தத் தொடரை தொடங்க திட்டங்கள் இருந்து வந்து தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. இது நீண்ட காலம் நடக்கும் மற்றும் வீரர்களுக்கும் வாய்ப்பு அளிக்கும் என்று நம்புகிறேன்.
இதையும் படிங்க : இங்கிலாந்து அணிக்கு சோகம்.. இலங்கைக்கு கிடைத்த 3வது லக்.. இந்திய அணிக்கு நடந்தது நடக்குமா?
நான் எப்பொழுதுமே சிவப்பு பந்து கிரிக்கெட்டுக்கு தான் முக்கியத்துவம் கொடுப்பேன்.பிறகுதான் உள்நாட்டு டி20 தொடர் முடாதாக் அலி டிராபிக்கு விளையாடுவதை யோசிப்பேன். ஐபிஎல் தொடருக்கு நான் முன்னுரிமை கொடுப்பதில்லை. அப்படியாக இருந்திருந்தால் நான் கடந்த வருடம் டெஸ்ட் கிரிக்கெட் வடிவத்தில் ரஞ்சி டிராபி விளையாடி இருக்க மாட்டேன். வெள்ளைப் பந்து தொடருக்கு கவனம் தருவேன் ஆனால் அது சிவப்புப் பந்து தொடருக்கு பின்புதான்” என்று கூறி இருக்கிறார்.






