இங்கிலாந்து அணிக்கு சோகம்.. இலங்கைக்கு கிடைத்த 3வது லக்.. இந்திய அணிக்கு நடந்தது நடக்குமா?

0
1186
Srilanka

இலங்கை அணி கடந்த வாரத்தில் பலமான இந்திய அணிக்கு எதிராக உள்நாட்டில் மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 27 வருடங்களுக்குப் பிறகு கைப்பற்றி அசத்தியது. இந்த நிலையில் மீண்டும் இங்கிலாந்தில் சென்று சாதிப்பதற்கும் அதிர்ஷ்டவசமான சூழ்நிலைகள் உருவாகி வருகிறது.

கடந்த டி20 உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணி மிக மோசமாக விளையாடி முதல் சுற்று உடன் வெளியேறி வந்தது. இதன் காரணமாக அணியின் தலைமை பயிற்சியாளர் சில்வர் வுட் ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து இலங்கை அணிக்கு தற்காலிக பயிற்சியாளராக இலங்கை முன்னாள் வீரர் சனத் ஜெயசூர்யா கொண்டுவரப்பட்டார்.

- Advertisement -

இப்படியான நிலையில் இந்திய அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இழந்து, அடுத்து நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை இலங்கை அணி வென்று அசத்தியது. தற்பொழுது இந்த பெரிய வெற்றியால் அந்த அணியின் தன்னம்பிக்கை அதிகரித்திருக்கிறது.

இதைத் தொடர்ந்து இலங்கை அணி இந்த மாதம் இங்கிலாந்து சென்று மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இங்கிலாந்து அணி கடந்து சில வருடங்களாக டெஸ்ட் கிரிக்கெட்டை அதிரடியான முறையில் விளையாடிய அசத்தி வருகிறது. எனவே இங்கிலாந்து அணியை இலங்கையில் எப்படி சமாளிக்கும்? என்பது ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது.

- Advertisement -

இப்படியான சூழ்நிலையில் இங்கிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர் ஜாக் கிரவுலி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விரலில் காயம் அடைந்து இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலகினார். அதிரடியான துவக்கத்தை அனாயசமாக கொடுக்கக்கூடிய இவர் இல்லாமல் இருப்பது இலங்கைக்கு பெரிய சாதகம்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இங்கிலாந்து அடியின் கேப்டன் ஸ்டோக்ஸ் இங்கிலாந்தில் நடைபெற்று வரும் நூறு பந்து போட்டியில் ஹாம்ஸ்ட்ரிங் காயத்தால் வெளியேறினார். இவர் இலங்கைத் தொடரில் விளையாடுவாரா? என்பது சந்தேகத்திற்குரியதாக இருக்கிறது. தற்போது இவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பந்து வீசியதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : நைட் 2 மணிக்கு எழுப்பி.. கிரிக்கெட்டுகாக இந்த விஷயத்தை செய்யச் சொன்னால் செய்வேன் – கேசவ் மகாராஜ் பேட்டி

இப்போது இங்கிலாந்து அணிக்கு இன்னொரு அடியாக வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ் காயம் காரணமாக நேற்று 100 பந்து போட்டியில் இருந்து வெளியேறி இருக்கிறார். இப்படி இங்கிலாந்து அணியின் மூன்று பெரிய வீரர்கள் தற்போது காயத்தால் விளையாட முடியாத நிலையில் இருக்கிறார்கள். இந்த நிலையில் இந்தியாவுக்கு அதிர்ச்சி கொடுத்தது போல இதை பயன்படுத்தி இலங்கை இங்கிலாந்துக்கும் அதிர்ச்சி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது!

- Advertisement -