சாஹாவுக்கு இதுல்லாம் ஜூஜூபி! 20 பந்திலே சதம் அடிச்ச ஆளுங்க! மீண்டும் அணியில் இடம் கிடைக்குமா?

0
3453

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் மாற்று விக்கெட் கீப்பராக இருந்தவர் தான் விரித்திமான் சாஹா. தோனி விளையாடிய காலத்தில் வாய்ப்பே இல்லாமல் பெஞ்சில் அமர வைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் தோனி ஓய்வு பெற்ற காலத்தில் புதிய விக்கெட் கீப்பராக பணியாற்றி வந்தார்.

ஆனால் மீண்டும் ரிஷப் பந்தின் வருகைக்குப் பிறகு சாகாவுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்கவில்லை. இந்த நிலையில் தான் சாஹாவை ஓய்வு பெற்றுக் கொள்ளுமாறு முன்னாள் தலைமை தேர்வு குழு உறுப்பினர் சேத்தன் சுர்மா கூறியிருக்கிறார். இதேபோன்று பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் சாஹாவிடம், இனி உனக்கு இந்தியாவில் இடம் கிடைக்காது என பேசி இருக்கிறார்.

- Advertisement -

இதனால் ஓய்வு குறித்து யோசி என கூறியிருந்தார்.இது சாகாவுக்கு பெரிய மன உளைச்சலை கொடுத்தது. இந்த நிலையில் ரிஷப்பந்திற்கு விபத்து ஏற்பட்டதால் கேஸ் பரத் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக வந்தார். ஆனால் அண்மைக்காலமாக கே எஸ் பரத் சரியாக விளையாடவில்லை.

இதனால் வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் கே எல் ராகுலை விக்கெட் கீப்பராக பயன்படுத்த முடிவெடுக்கப்பட்டது. ஆனால் தற்போது அவரும் காயம் காரணமாக விலகி இருக்கிறார். இதனால் மாற்று வீரராக யாரை தேர்வு செய்யலாம் என பிசிசிஐ யோசித்து வருகிறது.

இந்த நிலையில் தான் 38 வயதான சாஹா, ஐபிஎல் தொடரில் கலக்கி வருகிறார். தம்மை ஓய்வு பெற்றுக் கொள்ளுமாறு கூறியவர்கள் முகத்தில் கரியை பூச வேண்டும் என நினைக்கும்  சாகா 38 வயதிலும் நேற்று லக்னோலிக்கு எதிரான ஆட்டத்தில் சாகா 20 பந்தில் அரைசதம் அடித்தார்.

- Advertisement -

தொடர்ந்து அதிரடியாக விளையாடிய அவர் 43 பந்தில் 81 ரன்கள் விளாசினார். இதில் 10 பவுண்டரிகளும், நான்கு சிக்ஸர்களும் அடங்கும். டெஸ்ட் வீரராக அறியப்பட்ட ப சாகாக்கு இன்னொரு முகம் இருக்கிறது. அவர் உள்ளூர் போட்டிகளில் 20 பந்துகளில் சதம் அடித்து சாதனை எல்லாம் படைத்திருக்கிறார்.

இந்த தகவல் நேற்று இணையத்தில் வைரலாக பரவியது. இவ்வளவு திறமையும் சிறந்த விக்கெட் கீப்பராகவும் விளங்கும் சாகாவுக்கு இந்திய டெஸ்ட் அணியில் இடம் கொடுக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.