பெண்கள் ஐபிஎல்.. 16 ஓவர்.. பலம் வாய்ந்த மும்பை இந்தியன்ஸ்க்கு உபி வாரியர்ஸ் தந்த டிவிஸ்ட்

0
865
WPL

இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தும் பெண்களுக்கான டி20 டபுள்யுபிஎல் லீக் பெங்களூரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஒரு போட்டியில் உத்தரபிரதேச வாரியர்ஸ் அணியும் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற உத்தரபிரதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. மும்பை இந்தியன்ஸ் அணி மிகவும் வலிமையான அணியாக கடந்த தொடரிலும், இந்தத் தொடரிலும் இருக்கிறது.

- Advertisement -

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு முதல் விக்கெட்டுக்கு எட்டு ஓவர்களில் 50 ரன்கள் வந்தது. அந்த அணியின் யாஷிகா பாட்டியா 22 பந்தில் 26 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். மற்றுமொரு துவக்க வீராங்கனை வெஸ்ட் இன்டிசை சேர்ந்த ஹைலி மேத்யூஸ் 47 பந்துகளில் 55 ரன்கள் எடுத்தார்.

இதற்கடுத்து நாட் சிவியர் பிரண்ட் 19, அமிலியா கெர் 23, பூஜா வஸ்ட்ரேகர் 18, இஸ்ஸி வோங் 15 ரன்கள் எடுக்க, மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது. கிரேஸ் ஹாரிஸ் நான்கு ஓவர்களில் 20 ரன்கள் தந்து ஒரு விக்கெட் கைப்பற்றினார்.

இலக்கை நோக்கி விளையாடிய உத்தரபிரதேச வாரியர்ஸ் அணிக்கு கேப்டன் அலிசா ஹீலி 29 பந்தில் 33 ரன், கிரண் நகர்வா அதிரடியாக 33 பந்தில் 57 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். அந்த அணிக்கு நல்ல துவக்கம் கிடைத்தது. மூன்றாவது விக்கெட்டாக தாகிலா மெக்ராத் ஒரு ரன் எடுத்து வெளியேறினார்.

- Advertisement -

இதற்கு அடுத்து கிரேஸ் ஹாரிஸ் 17 பந்தில் 38, தீப்தி சர்மா 20 பந்தில் 27 ரன் என எடுத்து ஆட்டம் இழக்காமல் உத்திர பிரதேச வாரியர்ஸ் அணியின் வெற்றியை 7 விக்கெட் வித்தியாசத்தில்16.3 ஓவரில் உறுதி செய்தார்கள். மும்பை இந்தியன் தரப்பில் இஸ்ஸி வோங் 2 விக்கெட் கைப்பற்றினார்.

இதையும் படிங்க : ரோகித்-ஜெய்ஷா சம்பவம்.. ஸ்ரேயாஸ் இஷானுக்கு சம்பள பட்டியலில் ஏன் இடமில்லை?.. பிசிசிஐ அறிக்கை

பலம் வாய்ந்த மும்பை இந்தியன்ஸ் அணி தன்னுடைய முதல் இரண்டு போட்டிகளில் இரண்டையும் வென்று அசத்தலாக புள்ளி பட்டியலில் மேலே இருந்தது. இந்தத் தொடரில் பலம் குறைவாக பார்க்கப்படும் உத்தர பிரதேச அணி மும்பை இந்தியன்ஸ் அணியை வென்று இருக்கின்ற காரணத்தினால், தொடரில் தற்பொழுது விறுவிறுப்பு கூடியிருக்கிறது!