ரோகித்-ஜெய்ஷா சம்பவம்.. ஸ்ரேயாஸ் இஷானுக்கு சம்பள பட்டியலில் ஏன் இடமில்லை?.. பிசிசிஐ அறிக்கை

0
532
Rohit

இந்திய கிரிக்கெட் வாரியம் இந்த ஆண்டிற்கு அறிவித்துள்ள சம்பளப்பட்டியலில் இளம் வீரர் ஜெய்ஷ்வால் மற்றும் கில்ஆகியோர் முன்னேற்றம் கண்டிருக்கிறார்கள்.

அதே சமயத்தில் இளம் வீரர்களான இஷான் கிஷான் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் இந்த ஆண்டிற்கான சம்பள பட்டியலில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டு இருக்கிறார்கள்.

- Advertisement -

ஸ்ரேயாஸ் ஐயர் இதற்கு முன்பாக மூன்று கோடி சம்பளம் பெறும் பி பிரிவில் இருந்தார். இஷான் கிஷான் ஒரு கோடி சம்பளம் பெறும் சி பிரிவில் இருந்தார். தற்பொழுது இவர்கள் இந்த பிரிவுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள்.

இவர்கள் இருவருமே இந்திய அணிக்கு தேர்வாகாமலும் அதே சமயத்தில் காயம் எதுவும் இல்லாமலும் இருந்து, உள்நாட்டில் நடைபெற்றுக் கொண்டு வந்த ரஞ்சி தொடரில் தங்கள் மாநில அணிக்கு விளையாடாத காரணத்தினால், அதிரடியாக சம்பள பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இதுபோல் எல்லா வகையிலும் விளையாடுவதற்கு தகுதியாக இருந்தும் உள்நாட்டு கிரிக்கெட்டை யாராவது புறக்கணித்தால் அதற்கான விளைவுகள் கடுமையாக இருக்கும் என பிசிசிஐ எச்சரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. யோசிக்காமல் தற்பொழுது நடவடிக்கையில் இறங்கியும் இருக்கிறது.

- Advertisement -

இதுகுறித்து ஏற்கனவே பிசிசிஐ கூறும் பொழுது “ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இசான் கிஷான் இருவரும் இந்த வருடத்திற்கான சம்பள ஒப்பந்தத்திற்கு பரிசீலனை செய்யப்படவில்லை என்பதை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும். அனைத்து கிரிக்கெட் வீரர்களும் தங்களது தேசிய அணியை பிரதிநிதித்துவப் படுத்தாத பொழுது, உள்நாட்டு கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்தாக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து முன்பே ஜெய் ஷா கூறும் பொழுது ” உள்நாட்டு கிரிக்கெட்தான் இந்திய கிரிக்கெட்டுக்கு எல்லா விதத்திலும் சக்தி அளிக்கக் கூடியதாக இருக்கிறது என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்தியாவுக்காக விளையாட விரும்பும் ஒவ்வொரு வீரரும் உள்நாட்டு கிரிக்கெட்டில் நிரூபிக்க வேண்டும். இந்திய பணிக்கு தேர்வு செய்யப்பட இந்திய உள்நாட்டு கிரிக்கெட்தான் முக்கியமாக இருக்கிறது. உள்நாட்டு கிரிக்கெட்டில் பங்கேற்று விளையாடாவிட்டால் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தும்” என்று கூறியிருந்தார்.

இதையும் படிங்க : குஜராத் டைட்டன்ஸ் இளம் வீரர் தந்தையை சந்தித்த கில்.. உருக்கமான பின்னணி கொண்ட கதை

ரோகித் சர்மா இவர்கள் இருவர் பற்றியும் மறைமுகமாக கூறும் பொழுது ” டெஸ்ட் கிரிக்கெட் விளையாட பசி இருக்கும் வீரர்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள். யாருக்கு இந்த வடிவத்தில் விளையாட விருப்பமில்லை என்று தாமாகவே தெரிந்துவிடும். எனவே அப்படியான வீரர்கள் இங்கு தங்கி இருக்க மாட்டார்கள். நாங்கள் அவர்களை கண்டறிந்து விடுவோம் என்று கூறியிருந்தார்” என்பது குறிப்பிடத்தக்கது.