ஆர்சிபி-டெல்லி மோதல்.. 195 ரன் சேஸ்.. செபாலி வர்மா ஸ்மிரிதி மந்தனா கலக்கல் பேட்டிங்

0
102
WPL

இந்திய கிரிக்கெட் வாரியம் இரண்டாவது சீசனாக நடத்தும் டபிள்யூபிஎல் டி20 லீக்கில் பெங்களூரில் இன்று டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில் முதலில் டாசில் வெற்றி பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. வலிமையான டெல்லி அணிக்கு கடந்த முறைகளில் துவக்கம் சரியாக கிடைக்காமல் இருந்தது.

- Advertisement -

ஆனால் இந்த முறை அந்தக் குறை டெல்லி அணிக்கு இல்லை. டெல்லி அணியின் துவக்க வீராங்கனை மெக் லேனிங் 17 பந்தில் 11 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினாலும் கூட, இந்திய லேடி ஷேவாக் ஷபாலி வர்மா 31 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 50 ரன்கள் குவித்தார்.

அலைஸ் கேப்சி 33 பந்தில் 46 ரன்கள், கடைசி கட்டத்தில் மரிசானா கேப் 16 பந்தில் 32, ஜெஸ் ஜோனஸன் 16 பந்தில் 36, அருந்ததி ரெட்டி நான்கு பந்தில் 10 ரன் என அதிரடியாக அடிக்க, டெல்லி கேப்பிடல் அணி 20 ஓவர்கள் முடிவில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் குவித்தது. ஆர்சிபி அணியின் தரப்பில் சோபி டிவைன் 3 ஓபவர்கள் 23 ரன்கள் 2 விக்கெட் கைப்பற்றினார்.

இலக்கை நோக்கி விளையாடிய ஆர்சிபி அணிக்கு கேப்டன் ஸ்மிருதி மந்தனா இந்த முறை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருக்கு டபள்யூபிஎல் லீக்கில் முதல் முறையாக அரைசதம் வந்தது.

- Advertisement -

தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ஸ்மிருதி மந்தனா 43 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 73 ரன்கள் குவித்து ஆட்டம் நடந்தார். சோபி டிவைன் 17 பந்தில் 23 ரன்கள் எடுத்தார்.

மேக்னா கடைசிவரையில் போராடி 31 பந்தில் 36 ரன்கள் எடுத்தார். கடைசி மூன்று ஓவர்களுக்கு 46 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஆர் சி பி வீராங்கனைகளால் அதிரடியாக விளையாட முடியாத அளவுக்கு, சிறப்பான லைன் அண்ட் லென்த்தில் ஒவ்வொருவரது பலவீனத்திற்கும் டெல்லி கேப்பிட்டல் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி ஆர்சிபி அணியைக் கட்டுப்படுத்தினார்கள்.

20 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி அணியால் ஒன்பது விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று இருந்த ஆர்சிபி அணிக்கு இது முதல் தோல்வியாகும். டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு மூன்றாவது போட்டியில் இது இரண்டாவது வெற்றியாகும். ஆர்சிபி தரப்பில் ஜெஸ் ஜோனஸன் 3 விக்கெட் கைப்பற்றினார்.

இதையும் படிங்க : “சர்பராஸ் கான் இந்த வேலைக்கு சரிப்பட்டு வர மாட்டார்.. அவர விட்டுருங்க” – கங்குலி கருத்து

இன்று பெங்களூரு மைதானத்தில் ஆர் சி பி அணி விளையாடிய காரணத்தினால் மைதானத்தில் கூட்டம் நிரம்பியது. ஐபிஎல் தொடரில் ஆண்கள் அணிக்கு கிடைக்கும் வரவேற்பு பெண்கள் அணிக்கும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.