நான் விளையாட தடை செய்யப்பட்டு இருப்பேன்.. தோனியும் ரெய்னாவும்தான் காப்பாற்றினார்கள் – பாகிஸ்தான் கம்ரன் அக்மல் வெளியிட்ட ருசிகர தகவல்!

0
2915
Kamran

இந்தியா பாகிஸ்தான் இரண்டு கிரிக்கெட் அணிகளுக்கும் இடையே இரு நாட்டு கிரிக்கெட் தொடர் கடந்த 10 ஆண்டுகளாக அரசியல் காரணங்களால் நடைபெறாமல் இருக்கிறது. இந்த இரண்டு அணிகளும் ஐசிசி தொடர் மற்றும் ஆசியக் கோப்பை தொடர்களில் மட்டுமே விளையாடி வருகிறது!

கடைசியாக 2012 – 13 ஆம் ஆண்டு பாகிஸ்தான அணி இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் செய்திருந்தது. அதற்கு அடுத்து தற்போது வரை இரண்டு அணிகளுக்கும் இடையே தனிப்பட்ட முறையில் எந்தத் தொடர்களும் நடைபெறவில்லை.

- Advertisement -

இந்த நிலையில் இந்த முறை ஆசியக்கோப்பை பாகிஸ்தானில் நடைபெற இருந்தது. ஆனால் இந்திய கிரிக்கெட் வாரியமும் இந்திய அரசும் மிக உறுதியாக பாகிஸ்தான் செல்ல முடியாது என்று தெரிவித்து விட்டது. இந்த காரணத்தால் ஹைபிரிட் முறையில் ஆசிய கோப்பைத்தொடர் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் பிரித்து நடத்தப்படுகிறது.

ஆசியக் கோப்பையில் இந்திய பாகிஸ்தான் அணி குறைந்தது இரு முறை மோதிக் கொள்ளவும், அதேபோல் உலகக் கோப்பையில் ஒரு முறை மோதிக் கொள்ளவும்வாய்ப்பு மிக உறுதியாக இருக்கிறது. இரு நாடுகள் மோதிக் கொள்ளும் கிரிக்கெட் போட்டிகளுக்காக இருநாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் தாண்டி உலகம் முழுவதும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் 2012 13-ஆம் ஆண்டு பாகிஸ்தானின் இந்திய சுற்றுப்பயணத்தில் டி20 தொடரின் போது இஷாந்த் சர்மா மற்றும் கம்ரான் அக்மலுக்கு இடையே பெரிய வாய்த்தகராறு ஏற்பட்டது. தற்பொழுது அந்த பிரச்சனையில் என்ன நடந்தது என்று அவர் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “இஷாந்த் சர்மா என்னை கெட்ட வார்த்தையால் திட்டினார். அவர் என்னை நோக்கி கூறிய ஒரு கெட்ட வார்த்தைக்காக திருப்பி 20 முறை வாங்கினார். நான் இந்த விஷயத்தை நேர்மையாகவே சொல்கிறேன்.

அடுத்து நாங்கள் டி20 போட்டிகள் விளையாடுவதற்காக அகமதாபாத் செல்ல வேண்டி இருந்தது. அப்போது என் பக்கத்தில் முகமது ஹபீஸ், சோயிப் மாலிக் மற்றும் விராட் கோலி ஆகியோர் இருந்தார்கள். அதிலிருந்து யாரோ ஒருவர் அப்பொழுது அந்தப் பிரச்சினையில் என்ன நடந்தது என்று என்னிடம் கேட்டார்கள். நான் அவர்களிடம் இஷாந்த் சர்மா கூறிய கெட்ட வார்த்தையை சொன்னேன். அதற்கு அவர்கள் நீ செய்தது சரி என்று கூறினார்கள்.

இந்த விஷயம் அப்பொழுது சீரியஸாக மாறியது. அதிர்ஷ்டவசமாக மிஸ்டர் கூல் தோனி முதலிலும் அடுத்து பின்னர் சுரேஷ் ரெய்னாவும் தலையிட்டார்கள். அவர்களுக்கு யார் மீது தவறு என்று தெரியும். எனவே அவர்கள் நிலைமையை சரி செய்தார்கள்.

இல்லையென்றால் அந்த விஷயம் மிகவும் தீவிரமாக இருக்கும். நான் இரண்டு போட்டிகளுக்காவது விளையாட முடியாமல் தடை செய்யப்பட்டு இருக்கலாம். ஆனால் ஐந்து போட்டிகள் கட்டணத்தில் மட்டுமே அபராதம் விதிக்கப்பட்டது. இது மிகவும் தீவிரமான ஒன்று!” என்று கூறி இருக்கிறார்!