WTC புள்ளி பட்டியல்.. இந்தியாவுக்கு சிக்கலை உண்டாக்கிய தெ.ஆ கிரிக்கெட் போர்டு.. அதிரடி மாற்றங்கள்

0
122
WTC

கிரிக்கெட் ரசிகர்களின் வரவேற்பு டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு பெரிய அளவில் குறைந்து வந்த காரணத்தினால், ஐசிசி இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை அறிமுகப்படுத்தியது.

இதன் காரணமாக ஆடுகளங்கள் முடிவு தெரியும் படி அமைக்கப்பட்டது. அணிகள் வெற்றியை நோக்கி விளையாடின. இதனால் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மீண்டும் ரசிகர்கள் மைதானங்களை நோக்கி வர ஆரம்பித்திருக்கிறார்கள்.

- Advertisement -

2023-25 மூன்றாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் தற்போது மிக முக்கியமான தொடர்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. உள்நாட்டில் இந்தியா இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியை தோற்றது. அதே நேரத்தில் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருந்த ஆஸ்திரேலியாவும் உள்நாட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தோற்றது. மேலும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற இரண்டாவது இடத்துக்கும் முன்னேறியது. ஆஸ்திரேலியா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வந்தது.

இந்த நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு, அனுபவம் இல்லாத ஒரு அணியை தென் ஆப்ரிக்க கிரிக்கெட் வாரியம் நியூசிலாந்துக்கு அனுப்பி இருக்கிறது.

- Advertisement -

தற்பொழுது அவர்கள் நாட்டில் ஐபிஎல் தொடர்பு போல டி20 கிரிக்கெட் லீக் நடந்து கொண்டிருப்பதால், தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் முக்கிய வீரர்களை டி20 கிரிக்கெட் லீக்கில் ஆட வைத்து, நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கு பல அறிமுக வீரர்களைக் கொண்ட மிக அனுபவமற்ற அணியை அனுப்பியது.

தற்போது இந்த தொடரில் முதல் டெஸ்ட் போட்டியில் அனுபவம் இல்லாத தென் ஆப்பிரிக்க அணியை நியூசிலாந்து அணி 281 வித்தியாசத்தில் வீழ்த்தி பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றிருக்கிறது.

இதன் காரணமாக மூன்று போட்டிகளில் விளையாடி உள்ள நியூசிலாந்து ஒன்றில் தோற்று இரண்டு போட்டிகளை வென்று 66.66 என்ற வெற்றி சதவீதத்துடன் புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியிருக்கிறது. இதன் காரணமாக ஆஸ்திரேலியா, இரண்டாவது இடத்துக்கும் இந்தியா மூன்றாவது இடத்திற்கும் இறங்கி இருக்கின்றன.

இதையும் படிங்க : “ஐபிஎல் 2024.. ரிஷப் பண்ட் விஷயத்தில் இதை மட்டும் என்னால் சொல்ல முடியாது” – ரிக்கி பாண்டிங் தகவல்

தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் நிர்வாகம் வருமானத்திற்காக தங்களது முன்னணி வீரர்களை நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கு அனுப்பாமல், அனுபவம் இல்லாத அறிமுக இளம் வீரர்களை அனுப்பி தோல்வியைச் சந்திப்பதால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்திற்கு கீழே இறங்கி பின்னடைவை சந்திக்கிறது. அடுத்த டெஸ்ட் போட்டியிலும் நியூசிலாந்து வென்றால் இன்னும் இந்திய அணிக்கு பெரிய பின்னடைவு உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல் :

நியூசிலாந்து – 66.66
ஆஸ்திரேலியா – 55.0
இந்தியா – 52.77
பங்களாதேஷ் – 50.0
பாகிஸ்தான் – 36.66
மேற்கிந்திய தீவுகள் – 33.33
தென்னாப்பிரிக்கா -33.33
இங்கிலாந்து -25.0
இலங்கை – 00.0