“ஐபிஎல் 2024.. ரிஷப் பண்ட் விஷயத்தில் இதை மட்டும் என்னால் சொல்ல முடியாது” – ரிக்கி பாண்டிங் தகவல்

0
172
Rishabh

உலக கிரிக்கெட்டில் லெஜெண்ட் வீரராக சிலர் மட்டுமே உருவெடுக்கிறார்கள். இதில் கடந்த நூற்றாண்டின் இறுதியில் கிரிக்கெட்டில் அறிமுகமாகிய ரிக்கி பாண்டிங் மிக முக்கியமானவர். அவருடைய தலைமையிலான ஆஸ்திரேலிய அணிதான், இதுவரையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் பலமான அணியாகப் கருதப்படுகிறது.

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்ட அவர் ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்று வழி நடத்தி வருகிறார். மேலும் அவருடன் சவுரவ் கங்குலியும் இணைந்து பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

தற்பொழுது அமெரிக்க டி20 கிரிக்கெட் லீகில் வாஷிங்டன் ஃப்ரீடம் அணிக்கும் தலைமைப் பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் பணியாற்ற இருப்பதாக இன்று அதிகாரப்பூர்வ செய்திகள் வெளியில் வந்திருக்கிறது. டி20 லீக்குகளுக்கு பயிற்சியாளராக முழு நேரமாக ரிக்கி பாண்டிங் பணியாற்ற முடிவு செய்திருக்கிறார்.

இந்த நிலையில் தற்பொழுது உலகின் முதல் நிலை டி20 லீக்கான ஐபிஎல் தொடரில் இவர் தலைமை பயிற்சியாளராக பணியாற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணி அதன் கேப்டன் ரிஷப் பண்ட் இல்லாமல் மிகவும் தடுமாறி வருகிறது. கடந்த சீசன் அந்த அணிக்கு மிகவும் மோசமாக அமைந்திருக்கிறது.

இந்த வருட ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் அவர்கள் நிறைய வீரர்களை வெளியே விட்டு மீண்டும் புதிய அணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார்கள். இத்தோடு ரிஷப் பண்ட் உடல்நலம் குணமடைந்து நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா? என்பது குறித்து கேள்விகள் இருக்கிறது.

- Advertisement -

மேலும் ரிஷப் பண்ட் பேட்ஸ்மேனாக வருவாரா? இம்பேக்ட் பிளேயராக மட்டும் வருவாரா? கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பிங் பொறுப்புகளை ஏற்பாரா? என்பது குறித்து இதில் இன்னும் நிறைய கேள்விகள் எழுகிறது.

இதுகுறித்து டெல்லி கேப்பிட்டல் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் கூறும் பொழுது “ரிஷப் பண்ட் விளையாடப் போகிறார் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார். ஆனால் என்ன மாதிரியான பொறுப்புகளை எடுத்து விளையாடப் போகிறார் என்பது இன்னும் தெரியவில்லை. நீங்கள் சமூக ஊடகங்களில் அவரைப் பார்த்திருப்பீர்கள், அவர் நன்றாக ஓடுகிறார் மேலும் உற்சாகமாக இருக்கிறார்.

எனவே அவர் விளையாடுவது ஏறக்குறைய உறுதி. இதை எங்களால் சொல்ல முடியும். ஆனால் அணிக்கு விக்கெட் கீப்பிங் செய்வாரா? என்பது குறித்து எங்களால் இப்பொழுது எதுவும் சொல்ல முடியாது.

இதையும் படிங்க : NZvsSA.. 2வது பெரிய வரலாற்று வெற்றி.. தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது நியூசிலாந்து

நாங்கள் தற்பொழுது அவர் விஷயத்தில் என்ன நடக்கிறது என்பதை பார்த்துக் கொண்டிருக்கிறோம். அவர் வந்து விளையாடுவார் என்று நம்புகிறோம். அவர் மொத்தம் 14 போட்டிகளில் 10 போட்டிகளுக்கு கிடைத்தால் கூட நல்லதுதான். அவர் எங்களுக்கு எத்தனை போட்டிகளுக்கு கிடக்கிறாரோ அவ்வளவும் போனஸ்” என்று கூறியிருக்கிறார்.