அடுத்த 2 ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அட்டவணை.. இம்முறையாவது இந்தியா,பாகிஸ்தான் மோதுமா?

0
1664

2023 -2025 ஆண்டிற்கான WTC எனப்படும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான அட்டவணை தற்போது வெளியாகி உள்ளது. 2 ஆண்டுகள் நடைபெறும் இந்த தொடரில் புள்ளி பட்டியலில் முதல் 2 இடத்தை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டியில் மோதும்.

இந்த அட்டவணையில் ஆஸ்திரேலிய அணி தங்களது சொந்த மண்ணில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் அணிகளுடன் பலப்பரீட்சை நடத்த உள்ளது. இதே போன்று வெளிநாட்டுக்கு சுற்றுப் பயணணம் மேற்கொள்ளும் ஆஸ்திரேலிய அணி, நியூசிலாந்து, இங்கிலாந்து மற்றும் இலங்கையுடன் மோதுகிறது.

- Advertisement -

இதே போன்று டெஸ்ட் போட்டியை டி20 போல் விளையாடும் இங்கிலாந்து அணி தங்களது சொந்த மண்ணில் இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது. இதே போன்று வெளிநாட்டு மண்ணில் நியூசிலாந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தானுடன் விளையாடுகிறது.

இந்திய அணிக்கு தான் இருக்கிறதே மிகவும் எளிமையான அணிகளை எதிர்கொள்ளும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. சொந்த மண்ணில் இந்திய அணி வங்கதேசம், நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளுடன் விளையாட உள்ளது. வெளிநாட்டு சுற்றுப் பயணத்தின் போது தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா என சவாலான தொடரையும், வெஸ்ட் இண்டீஸ் உடன் மோதுகிறது.

பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை இம்முறையும் சொந்த மண்ணில் விளையாடுகிறது. அவர்கள் இங்கிலாந்து வெஸ்ட் இண்டீஸ் வங்கதேசம் ஆகிய அணியையும், வெளிநாட்டு சுற்றுப் பயணத்தின் போது தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இலங்கை ஆகிய அணிகளையும் பலப்பரீட்சை நடத்துகிறது.

- Advertisement -

நடப்பு சைக்கிளில் 3வது இடம் பிடித்த இலங்கை அணி, தங்களது சொற்த மண்ணில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் ஆகிய அணிகளையும், தென்னாப்பிரிக்கா, வங்கதேசம். இங்கிலாந்து, ஆகிய அணிகளை வெளிநாட்டு மண்ணிலும் எதிர் கொள்ள உள்ளது. இந்த நிலையில், இம்முறையும், இந்தியா, பாகிஸ்தான் அணிகள் டெஸ்ட் போட்டியில் மோதவில்லை. ஒரு வேலை டாப் 2 இடத்தை பிடித்தால் மட்டுமே இந்த அணிகள் இறுதிப் போட்டிக்கு மோதும்.