ஏமாத்திட்டாங்க.. நாங்க ஜெயிக்க வேண்டிய மேட்ச்… பாகிஸ்தான் முகமது ஹபீஸ் பரபரப்பு குற்றச்சாட்டு

0
652

பாகிஸ்தான் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டியில் விளையாடிய வருகிறது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 360 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதைத்தொடர்ந்து இரண்டாவது போட்டி மெல்பர்னில் நடைபெற்றது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அணி 318 ரன்கள் குவிக்க, அதைத் தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான அணி 264 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்னர் 54 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சைத் தொடங்கிய ஆஸ்திரேலியா அணி 262 ரன்களுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது.

- Advertisement -

பின்னர் 317 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களம் இறங்கியது. தொடக்கத்தில் இரண்டு விக்கெட்டுகளை விரைவில் இழந்தாலும், கேப்டன் மசூத் நிதானமாக விளையாடி 60 ரன்கள் குவித்தார். அவருக்கு பக்கபலமாக பாபர் அசாம் 41 ரன்கள் குவிக்க, பாகிஸ்தான் அணி 146/4 என்ற நிலையில் விளையாடிக் கொண்டிருந்தது.

அப்போது பாகிஸ்தான் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் முகமது ரிஸ்வான் களத்தில் இருந்தார். அவர் களத்தில் இருக்கும் போது பாகிஸ்தான் அணிக்கு வெற்றி பெறும் நம்பிக்கை இருந்தது. முகமது ரிஸ்வான் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் வீசிய பந்தினை எதிர்கொண்டார். கம்மின்ஸ் வீசிய பந்து ரிஸ்வானின் கையில் பட்டு செல்வது போல் தெரிந்தது.

இதற்கு ஆஸ்திரேலியா அணியினர் அப்பீல் செய்ய அம்பையர் அவுட் தர மறுத்து விட்டார். இருப்பினும் ஆஸ்திரேலியா அணி அம்பயரின் முடிவை எதிர்த்து டிஆர்எஸ் முறைக்கு சென்றனர். இதனை ஆய்வு செய்த 3வது நடுவர், ரிஸ்வானின் கையில் அணிந்திருந்த கையுறையில் பந்து பட்டுச் செல்வது தெரிய வந்தது. இது பேட்ஸ்மேன்கள் வியர்வை வடிந்தால் துடைத்துக் கொள்ள பயன்படுத்தப்படும் துணியாகும்.

- Advertisement -

எனவே இதைக் கண்ட நடுவர் ரிஸ்வானுக்கு அவுட் வழங்கினார். இதனை சற்றும் எதிர்பாராத ரிஸ்வான் ஏமாற்றத்தோடு பெவிலியின் திரும்பினார். இதோடு பாகிஸ்தான் அணியின் வெற்றி நம்பிக்கையும் தகர்ந்தது. பின்னால் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்ததால் ஆஸ்திரேலிய அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் ஆஸ்திரேலியா 3 போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் முகமது ரிஸ்வானுக்கு தவறான அவுட் வழங்கியதே அணியின் தோல்விக்கு காரணம் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது ஹபீஸ் கருத்துத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது
“பாகிஸ்தான் அணியில் உள்ள தவறுகளை ஆராய்ந்து அதை அடுத்து வரும் போட்டிகளில் சரி செய்து கொள்ளலாம். ஆனால் அம்பியரிங் மற்றும் டெக்னாலஜி சரியாக இருந்திருந்தால் பாகிஸ்தான அணி போட்டியில் வெற்றி பெற்றிருக்கும். நான் டெக்னாலஜிக்கு என்றுமே ஆதரவாக இருப்பவன். ஆனால் அதனை சரியாகப் பயன்படுத்தாமல் போனால் முடிவுகள் இவ்வாறாகத்தான் இருக்கும். எனவே பின்வரும் காலங்களில் இது சரி செய்யப்பட வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.