இறுதி போட்டிக்கு 5 அணிகள் மோதல் – சவாலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ரேஸ்

0
2240

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு 5 அணிகளுக்கு வாய்ப்பு உள்ளதால், அந்த பந்தயம் சூடு பிடித்துள்ளது. தற்போது புள்ளி பட்டியலில் முதல் 2 இடத்தில் ஆஸ்திரேலியாவும், இந்தியாவும் உள்ளது. இதில் ஆஸ்திரேலியா ஏறக்குறைய இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றாலும், இந்தியா, ஆஸ்திரேலிய என இரு அணிகளும் தங்களது இடத்தை உறுதி செய்யவில்லை.

- Advertisement -

  மழை காரணமாக தென்னாப்பிரிக்கா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி சமனில் முடிந்தது.  இதன் காரணமாக  ஆஸ்திரேலிய அணி  75.5% புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. ஆனால் ஆஸ்திரேலியா அணி இந்தியாவுக்கு எதிராக 4க்கு 0 என்ற கணக்கு தோல்வியை அடைந்து,  இலங்கை அணி நியூசிலாந்துக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை வென்றால், ஆஸ்திரேலிய அணி வெளியேறிவிடும்.

இதே போன்று இந்திய அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலிய அணியுடன் தனது சொந்த மண்ணில் மோதுகிறது.  இதில் இந்திய அணி குறைந்தபட்சம்  3 டெஸ்ட்களில் வெல்ல வேண்டும். அபோது தான் இறுதிச் சுற்று வாய்ப்பு கிடைக்கும்.  ஒருவேளை 2-0 அல்லது 2-2 என்ற கணக்கில் இந்தியா வென்றால், இலங்கை அணி நியூசிலாந்து மண்ணில் நடைபெறும் டெஸ்ட் தொடரில் 2-0 என்ற கணக்கில் தோல்வியை தழுவினால் மட்டுமே இந்திய அணிக்கு இறுதிச் சுற்று வாய்ப்பு கிடைக்கும். இறுதிச்சுற்றுக்குச் செல்ல முடியும்.

- Advertisement -

இதேபோன்று தென்னாப்பிரிக்க அணியை பொறுத்தவரை  48.72 சதவீதத்துடன் 4வது இடத்தில் உள்ளது. மார்ச் மாதம் நடைபெற உள்ள மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளையும்  அந்த அணியை முழுமையாக வென்று,   இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்குகு எதிராக தொடரையும்,   இலங்கை அணி நியூசிலாந்து உடன்  தோல்வியையும் அடைந்தால்  தென்னாபிரிக்க அணி இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பு உள்ளது.

இலங்கை அணிக்கு இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பு உள்ளது.  நியூசிலாந்துக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட  தொடரை முழுமையாகவவோ, அல்லது ஒரு போட்டியிலாவதோ வென்று,  ஆஸ்திரேலியாவிடம் இந்தியாவும்,  வெஸ்ட் இண்டீஸ் அணியிடம்  தென்னாப்பிரிக்க அணியும்   தோல்வியை தழுவினால் இலங்கைக்கு வாய்ப்பு உள்ளது. இதே போன்று இங்கிலாந்து அணியை பொறுத்த வரையில் இந்தியா, இலங்கை, தென்னாப்பிரிக்கா தாங்கள் எஞ்சிய போட்டியில் தோற்க வேண்டும்.

- Advertisement -