விராட் கோலி, ரோகித் சர்மா, ஆகியோர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள நிலையில் தற்போது இந்திய அணி மிக முக்கியமான ஒரு கட்டத்தை எதிர்நோக்கி இருக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புதிய சைக்கிள் வரும் ஜூன் மாதம் 20ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
முதல் தொடராக இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த தொடர்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஸ்ரேயாஸ் ஏன் இல்லை:
இதில் இந்திய அணியின் கேப்டனாக கில் மற்றும் துணை கேப்டனாக ரிஷப் பண்ட் ஆகியோர் அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள். கோலி, ரோஹித் ஆகியோர் இல்லாத நிலையில் இந்திய அணியின் ஸ்டார் வீரரான ஸ்ரேயாஸ் ஐயருக்கு முக்கிய இடம் டெஸ்ட் அணியில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தேர்வுக்குழு கருண் நாயரை ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு சேர்த்து இருக்கிறது .
இது குறித்து விளக்கம் அளித்துள்ள தேர்வு குழு தலைவர் அஜித் அகார்கர், ஸ்ரேயாஸ் ஐயர் சமீப காலமாக அபாரமாக விளையாடி வருகிறார். நடந்து முடிந்த ஒரு நாள் தொடர் மற்றும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் நல்ல முறையில் ரன்கள் சேர்த்து வருகிறார்.
ஆனால் தற்போது இந்திய டெஸ்ட் அணியில் அவருக்கு இடம் உருவாகவில்லை என்று ஒற்றை வரியில் பதிலளித்து முடித்து விட்டார். சமி குறித்து கேள்விக்கு பதில் அளித்த அவர் ஐபிஎல் தொடரில் விளையாடிக் கொண்டிருந்த சமிக்கு காயம் ஏற்பட்டு இருக்கிறது. இதில் அவருக்கு நடத்தப்பட்ட எம்ஆர்ஐ ஸ்கேன் இல் காயத்தின் தன்மை குறித்து மருத்துவக் குழுவினர் அறிக்கை அளித்தனர்.
ஷமி சேர்க்கப்படாதது ஏன்?
அதில் சமி, இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் பங்கேற்பது சிரமம் என்று அவர்கள் குறிப்பிட்டு இருந்தனர். தொடர் பிற்பகுதியில் சமி வருவதற்கான வாய்ப்பு இருந்தது. ஆனால் தொடர் ஆரம்பத்தில் காயமடைந்த வீரருக்காக காத்திருப்பது முறையல்ல என்ற முடிவை நாங்கள் எடுத்தோம் என்று அஜித் அகார்கர் கூறியுள்ளார்.
இதேபோன்று சர்பராஸ் கான் ஏன் அணியில் தேர்வு செய்யப்படவில்லை என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அஜித் அகார்கர், சில சமயம் சில நல்ல முடிவுகளை எடுக்க வேண்டும். சர்பராஸ் கான், நியூசிலாந்துக்கு எதிராக சதம் அடித்தார்.
இதையும் படிங்க: விராட் கோலி ரோஹித் சர்மா ஓய்வு பெற்றது ஏன்?.. ஐபிஎல்க்கு முன்னவே ஆரம்பிச்சாச்சு – அகர்கர் வெளியிட்ட தகவல்
ஆனால் அதன் பிறகு பெரிய அளவில் அவர் ரன் எடுக்கவில்லை. ஆனால் சில சமயம் இந்திய அணி நிர்வாகம் தான் இது போன்ற முடிவை எடுக்கும். கருண் நாயர் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் அபாரமாக விளையாடி வருகிறார். அவருக்கு நல்ல அனுபவம் இருக்கின்றது. விராட் கோலி போன்ற வீரர்கள் இல்லாத நிலையில், கவுன்டி கிரிக்கெட்டில் விளையாடிய கருண் நாயரின் அனுபவம் நிச்சயம் இந்திய அணிக்கு தேவைப்படும் என்பதற்காக தான் இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறியுள்ளார்.






