2025 டு 2027.. 4வது WTC இந்திய அணியின் டெஸ்ட் தொடர் முழு அட்டவணை.. சிக்கலான சுற்று பயணங்கள்

0
126

இந்திய அணி அடுத்த மாதம் இங்கிலாந்து அணிக்கு எதிராக நான்காவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளில் முதல் டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த சைக்கிளுக்கான இந்திய டெஸ்ட் அணியின் முழு அட்டவணையையும் பார்க்கலாம்.

இந்திய அணி முதல் இரண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. ஆனால் தற்போதைய மூன்றாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியவில்லை. இந்த நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக அவர்களது மண்ணில் நான்காவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளில் முதல் தொடரில் இந்திய அணி விளையாட இருக்கிறது.

- Advertisement -

இந்திய அணிக்கு முதல் சவால்

இந்த நான்காவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளில் முதல் டெஸ்ட் தொடரில் இந்திய அணி இங்கிலாந்து சென்று இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடர் அடுத்த மாதம் ஜூன் 20ஆம் தேதி ஆரம்பிக்க இருக்கிறது. இந்திய அணிக்கு இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடர் பெரிய சவாலாக அமையும்.

அடுத்து இந்த ஆண்டு அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், மேலும் இதே ஆண்டு சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் இந்திய அணி விளையாடுகிறது.

- Advertisement -

இந்திய அணிக்கு இரண்டாவது சவால்

இதைத் தொடர்ந்து நீண்ட இடைவெளி எடுத்து 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலங்கை சென்று அந்த அணிக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும், அடுத்து 2026 ஆம் ஆண்டு அக்டோபர்-டிசம்பர் மாதங்களில் நியூசிலாந்து சென்று அந்த அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாடுகிறது.

இதையும் படிங்க: ஓபனா சொல்றன்.. சர்ப்ராஸ் கானை இதனாலதான் செலக்ட் பண்ணல.. அவங்க இப்படி நினைக்கிறாங்க – புஜாரா விளக்கம்

இதற்கடுத்து 2027 ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்தில் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இது நான்காவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளில் இந்திய அணிக்கு இரண்டாவது பெரிய சவாலாக அமையும். மொத்தமாக இந்த சைக்கிளில் இந்திய அணி 18 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் ஒன்பது போட்டிகளை உள்நாட்டிலும் 9 போட்டிகளில் வெளிநாட்டிலும் விளையாடுகிறது!

- Advertisement -