இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் வரும் ஜூன் 20ஆம் தேதி தொடங்குகிறது.விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் ஓய்வு பெற்ற நிலையில் இந்திய அணி புதிய ஒரு அத்தியாயத்தை டெஸ்ட் கிரிக்கெட்டில் எட்டிருக்கிறது.
ரோகித் சர்மா ஓய்வு பெற்ற நிலையில் பும்ரா தான் அடுத்த டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட வேண்டும் என பல முன்னாள் வீரர்களும் வலியுறுத்தி இருந்தனர். ஆஸ்திரேலிய தொடரில் கேப்டனாக பும்ரா செயல்பட்ட நிலையில் அவருக்கு காயம் ஏற்பட்டது.
பும்ரா முழுமையாக விளையாட மாட்டார்:
இந்த தருணத்தில் இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக கில் நியமிக்கப்பட்டார். இது குறித்து தேர்வு குழுத் தலைவர் அஜித் அகாகரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அஜித் அகார்கர், “நாங்கள் ஒன்று அல்லது இரண்டு தொடருக்கு மட்டும் கேப்டனாக செயல்படும் நபர்களை நாங்கள் தேர்வு செய்யவில்லை.”
“நாங்கள் எதிர்காலத்திற்கான மீது முதலீடு செய்ய விரும்புகிறோம். அப்போதுதான் இந்திய அணியை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும். கில் அந்த பணியை சிறப்பாக செயவார் என்று நம்புகிறோம். பும்ரா ஐந்து டெஸ்ட் போட்டிகளுக்கும் முழுமையாக விளையாட மாட்டார் என நினைக்கின்றேன். மூன்று அல்லது நான்கு டெஸ்டில் அவர் விளையாடினாலே அது எங்களுக்கு போதும்.”
மாற்று வீரராக ஆர்ஸ்தீப் இருப்பார்:
“ஏனென்றால் பும்ராவின் பணி சுமையை நாங்கள் பத்திரமாக கையாள வேண்டும். இந்த மூன்று, நான்கு டெஸ்ட் போட்டிகளில் அவர் விளையாடினால் கூட அது இந்தியாவுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம் ஆகும். அவர் அணியில் ஒரு அங்கமாக இருப்பதை நினைத்து நான் மகிழ்ச்சி கொள்கின்றேன்.எங்களுடைய முடிவு குறித்து பும்ராவிடம் நாங்கள் பேசிவிட்டோம். அவரும் எங்கள் முடிவை ஏற்றுக் கொண்டார்.”
இதையும் படிங்க: IND vs ENG: இந்திய டெஸ்ட் அணியில் ஸ்ரேயாஸ், ஷமி, சர்பராஸ் கான் ஏன் தேர்வு செய்யப்படவில்லை.. அஜித் அகார்கர் விளக்கம்
“ஏனென்றால் அவருடைய உடல் தகுதி எவ்வாறு இருக்கிறது என்று நம்மை விட அவருக்கு தான் நன்றாக தெரியும்.ஆர்ஸ்தீப் சிங் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடிய அனுபவம் இருக்கிறது. எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைத்ததோ அப்போதெல்லாம் அவர் உள்நாட்டு கிரிக்கெட் போட்டியிடும் விளையாடினார். அவருடைய உயரம் மற்றும் புதிய பந்தை பயன்படுத்திக் கொண்டு அவரால் என்ன செய்ய முடியும் என்று நம் அனைவருக்கும் தெரியும். பும்ரா இல்லாத நிலையில் ஆர்ஸ்தீப் நிச்சயம் இந்திய அணிக்கு மாற்று வீரராக இருப்பார்” என்று அஜித் அகார்கர் கூறியுள்ளார்.






