உலகக்கோப்பை குவாலிபயர் போட்டிகள் நடத்துவதில் சிக்கல்… ஜிம்பாப்வேயில் நேர்ந்த விபத்து! – கிரவுண்டுகள் எரிந்த சோகம்

0
303

ஜிம்பாப்வே ஹராரே பகுதியில் மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. இதற்கு அருகில் தான் உலகக்கோப்பை குவாலிஃபையர் போட்டிகள் நடத்தப்பட்டு வருவதால் தற்போது சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

50 ஓவர் உலகக்கோப்பை இந்த வருடம் இந்தியாவில் வருகிற அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெறுகிறது. தரவரிசை பட்டியல் அடிப்படையில் முதல் எட்டு அணிகள் நேரடியாக தகுதி பெற்றுவிட்டன. மொத்தம் பத்து அணிகள் போட்டி போடும் உலககோப்பையில், மீதம் இருக்கும் இரண்டு இடங்களுக்கு தகுதிச்சுற்று அடிப்படையில் அணிகள் தேர்வு செய்யப்பட இருக்கின்றன.

- Advertisement -

இரண்டு இடங்களுக்கான தகுதிச்சுற்று ஜிம்பாப்வேயில் இப்போது நடைபெற்ற வருகிறது. இதற்காக பத்து அணிகள் பங்கேற்று இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, தலா ஐந்து அணிகள் ஒரு பிரிவிற்கு என்கிறவாறு லீக் போட்டிகள் நடைபெறுகிறது.

லீக் போட்டிகள் முடிந்தபிறகு புள்ளி பட்டியலில் இரண்டு பிரிவுகளிலும் முதல் மூன்று இடங்கள் பிடித்த அணிகளுக்கு இடையே சூப்பர் சிக்ஸ் போட்டிகள் நடத்தப்பட இருக்கிறது. ஜிம்பாப்வேயில் நடைபெற்று வரும் இந்த குவாலிபயர் சுற்றில் பெரும்பாலான போட்டிகள் ஹராரே மைதானத்தில் நடைபெறுகின்றன.

ஹராரே மைதானத்தில் வியாழக்கிழமை முதல் திங்கட்கிழமை வரை மொத்தம் ஆறு லீக் போட்டிகள் நடத்தப்பட இருந்தது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை இந்த ஹராரே மைதானத்தில் அதி பயங்கர தீ விபத்து ஏற்பட்டு இருக்கிறது. மைதானத்தின் தெற்கு பகுதியில் இருக்கும் சீட்டுகள் மற்றும் இதர பகுதிகள் பெரும்பாலும் தீ விபத்தில் சிக்கி கருகின. இந்த மைதானத்தில் போட்டிகள் நடத்தப்படுவதில் தற்போது சிக்கல் ஏற்பட்டு இருக்கின்றன.

- Advertisement -

ஆனாலும் அட்டவணைப்படி போட்டிகள் நடைபெறும் என்று தெரிகிறது. தீ விபத்து ஏற்பட்டது குறித்து ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் எந்தவித தகவல்களையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால் ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் வெளியிட்ட அறிக்கையில், “மைதானத்தில் ஒரு பகுதி தீ விபத்திற்கு இறையானது. அதனை துரித அடிப்படையில் விரைவில் சரி செய்வோம். குவாலிபயர் போட்டிகளுக்கு எந்த வித சிக்கலும் இல்லாதவாறு பார்த்துக் கொள்வோம் என அறிவித்திருந்தனர்.

அடுத்த நாளே நேபாளம் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி இந்த ஹராரே மைதானத்தில் நடைபெற்றது. மைதானத்தின் ஒரு பகுதியில் ரசிகர்கள் எவரும் அமர்த்தப்படவில்லை அங்கு பணிகள் நடைபெற்று வருகிறது. இன்னொரு பகுதியில் டெண்ட் போன்று ஏற்பாடு செய்யப்பட்டு பார்வையாளர்களுக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

அடுத்தடுத்த லீக் போட்டிகளுக்குள் பணிகள் முழுமையாக முடிவடைமா? அல்லது போட்டிகள் தற்காலிகமாக வேறு சில மைதானங்களுக்கு மாற்றி வைக்கப்படுமா? என்பது குறித்த அறிவிப்பை வரும் நாட்களில் தெரிவிப்போம் என்று ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் ஐசிசி இடம் தெரிவித்திருக்கிறது.