உலகக்கோப்பை தங்க பேட்.. கோலி ரோஹித்தை மிஞ்சிய ரிஸ்வான்.. சூடு பிடிக்கும் கோல்டன் பேட்டுக்கான போட்டி.!

0
7591

தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் உலக கோப்பையில் நேற்று நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா 62 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பெங்களூரில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் ஆஸ்திரேலியாவை பேட்டிங் செய்ய கேட்டுக் கொண்டது.

முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 367 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் டேவிட் வார்னர் மற்றும் மிச்சல் மார்ஸ் ஆகியோர் சதம் அடித்தனர். டேவிட் வார்னர் 163 ரன்களும் மிச்சல் மார்ஸ் ரன்களும் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து ஆடியோ பாகிஸ்தான் 35 ரன்கள் ஆல் அவுட் ஆனது . அந்த அணியின் இமாம் உல் ஹக் 70 ரண்களும் அப்துல்லா ஷபிக் 64 ரன்களும் எடுத்தனர். முகமது ரிஸ்வான் சிறப்பாக விளையாடி 46 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

நேற்றைய போட்டியில் 46 ரன்கள் எடுத்ததன் மூலம் இந்த வருட உலகக் கோப்பையில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறி இருக்கிறார் முகமது ரிஸ்வான். இதன் மூலம் இவர் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரை கடந்து முதலிடத்திற்கு முன்னேறி இருக்கிறார். இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பங்களாதேஷ் அணியுடன் போட்டியின் போது 48 ரன்கள் குவித்ததன் மூலம் நான்கு போட்டிகளில் 265 ரன்கள் எடுத்து முதல் இடத்தில் இருந்தார்.

அதே போட்டியில் சதம் எடுத்த விராட் கோலி நான்கு போட்டிகளில் 259 ரன்கள் உடன் இரண்டாவது இடத்தில் இருந்தார். நேற்றைய போட்டியில் ரிஸ்வான் 46 ரன்கள் எடுத்ததன் மூலம் நான்கு போட்டிகளில் 294 ரன்கள் எடுத்து முதல் இடத்திற்கு முன்னேறி இருக்கிறார். இதன் மூலம் கோல்டன் பேட் விருதுக்கான வரிசையில் ரிஸ்வான் முன்னணியில் உள்ளார். இந்த உலகக் கோப்பையின் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவர் நெதர்லாந்து அணிக்கு எதிராக 78 ரன்களும் இலங்கை அணிக்கு எதிராக 131 ரன்களும் இந்தியா அணிக்கு எதிராக 49 ரண்களும் நேற்றைய ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் 46 ரன்களும் எடுத்திருக்கிறார்.

உலகக்கோப்பை இல் அதிக ரன்களை குவித்த வீரர்களின் பட்டியலில் 294 ரன்கள் உடன் ரிஸ்வான் முதலிடத்திலும் 265 ரன்கள் உடன் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா இரண்டாவது இடத்திலும் 259 ரன்கள் உடன் விராட் கோலி மூன்றாவது இடத்திலும் நியூசிலாந்து அணியின் டேவான் கான்வே 249 ரன்கள் உடன் நான்காவது இடத்திலும் தென்னாப்பிரிக்க அணியின் குவிண்டன் டிக்காக் 229 ரன்கள் உடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.

- Advertisement -

2023 ஆம் ஆண்டிற்கான உலகக் கோப்பை போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்தும் பந்துவீச்சாளருக்கு கோல்டன் பால் வழங்கப்பட இருக்கிறது. இதற்கான போட்டியில் நியூசிலாந்து அணியின் மிச்சல் சான்ட்னர் 11 விக்கெட்களுடன் முதலிடத்தில் இருக்கிறார். இந்திய அணியின் ஜஸ்பிரீத் பும்ரா10 விக்கெட்களுடன் இரண்டாவது இடத்திலும் 9 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கும் நியூசிலாந்து அணியின் மேட் ஹென்றி மூன்றாவது இடத்திலும் ஷாஹின் ஷா அப்ரிதி ஆடம் ஜாம்பா ஆகியோர் 9 விக்கெட்டுகளுடன் முறையை நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களில் இருக்கின்றனர். பாகிஸ்தான் அணியின் ஹாரிஸ் ரவுப் 8 விக்கெட்டுகளுடன் ஆறாவது இடத்தில் இருக்கிறார்.

இன்று நடைபெற இருக்கும் உலகக் கோப்பை ஆட்டங்களில் நெதர்லாந்து மற்றும் இலங்கை அணிகள் காலை 10 மணிக்கு லக்னோவில் வைத்து விளையாட இருக்கின்றன. இதனைத் தொடர்ந்து நடைபெற இருக்கும் போட்டியில் இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மும்பையில் வைத்து மோத உள்ளன. இரண்டு அணிகளும் தோல்வியுடன் இந்த போட்டியை சந்திக்க இருப்பதால் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.