“WIvsENG..10ஓவர் 106ரன்.. தோனி சொல்லி கொடுத்ததை செஞ்சேன்” – ஷாய் ஹோப் சுவாரசியமான கருத்து!

0
1589
Dhoni

தற்போது இங்கிலாந்து வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது

இதில் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி நேற்று தொடங்கியது. இங்கிலாந்து அணியில் உலக கோப்பையில் விளையாடிய நிறைய வீரர்கள் இடம் பெறவில்லை.

- Advertisement -

இந்த நிலையில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்வது என தீர்மானித்தது, அந்த அணியின் ஹாரி புரூக் 71 ரன்கள் எடுக்க, 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இங்கிலாந்து 325 ரன்கள் எடுத்தது.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இந்த முறை அலிக் ஆதனஸ் அதிரடியாக அரை சதம் அடித்து நல்ல துவக்கம் தந்தார். இதற்குப் பிறகு விக்கெட்டுகள் சரிந்தது. கேப்டன் ஷாய் ஹோப் ரோமரியோ ஷெப்பர்ட் உடன் இணைந்து ஒரு நல்ல பார்ட்னர்ஷிப்பை உருவாக்கினார்.

வெஸ்ட் இண்டீஸ் அணி 40 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 220 ரன்கள் எடுத்தது. மேற்கொண்டு கடைசி பத்து ஓவர்களுக்கு 106 ரன்கள் தேவைப்பட்டது. இதை ஏழு பந்துகள் மீதம் வைத்து வெஸ்ட் இண்டிஸ் மேற்கொண்டு ஒரு விக்கெட் மட்டுமே இழந்து வென்றது.

- Advertisement -

இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஷாய் ஹோப் இறுதி வரை ஆட்டம் இழக்காமல் 83 பந்துகளில் நான்கு பவுண்டரி மற்றும் ஏழு சிக்ஸர் உடன் 109 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருது வென்றார்.

வெற்றிக்குப் பின் பேசிய வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஷாய் ஹோப் “நான் சில காலத்திற்கு முன்பு மகேந்திர சிங் தோனி உடன் பேசினேன். அப்போது அவர் அதிக நேரம் நாம் கிரீசில் இருக்க வேண்டும் என்று கூறினார். நான் இந்த போட்டியில் அதையே செய்தேன். என் சதம் வெற்றிக்கு காரணமாக இருந்தது மகிழ்ச்சி. நாங்கள் வென்றதில் மேலும் மகிழ்ச்சி.

இன்று செப்பர்ட் பேட்டிங் செய்த விதம் ஆச்சரியமாக இருந்தது. நாங்கள் தொடரை சிறப்பாக தொடங்கி இருக்கிறோம். இதை அடுத்த போட்டிக்கு கொண்டு செல்ல வேண்டும். இங்கிலாந்து துவக்க ஆட்டக்காரர்கள் சிறப்பாக விளையாடினார்கள். அடுத்த போட்டியில் நாங்கள் சிறப்பாக தொடங்க வேண்டும். மேலும் எங்கள் தொடக்க ஆட்டக்காரர்கள் நன்றாக விளையாடினார்கள். அவர்கள் இருவரும் சிறந்த வீரர்கள். தொடர்ச்சியாக எல்லாவற்றையும் சரியாக செய்வது குறித்து பார்க்க வேண்டும்!” என்று கூறியிருக்கிறார்!