“தோனி இல்லனா இந்த வீரர் இவ்வளவு பெரிய ஆளா இருக்க முடியாது!” – கம்பீர் ஆச்சரியமான பேச்சு!

0
306
Gambhir

இன்று இந்தியா, இலங்கை அணிக்கு எதிராக ஆசியக்கோப்பை இரண்டாவது சுற்றில் விளையாடி வருகிறது. இந்திய அணி இரண்டாவது சுற்றில் தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை நேற்று 228 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இந்த நிலையில் இன்று இலங்கைக்கு எதிரான போட்டியை வென்றால், கையில் இருக்கும் நல்ல ரன் ரேட் காரணமாக நேரடியாக இந்தியா இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.

- Advertisement -

இப்படியான நிலையில் இந்தியா இன்று மிக முக்கியமான போட்டிக்கான டாசை வென்று முதலில் பேட்டிங் செய்வது என தீர்மானித்தது. இதன்படி இந்திய அணிக்கு துவக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் களம் வந்தார்கள்.

இன்றைய போட்டியில் பாகிஸ்தான் போட்டி போல் இல்லாமல் ரோகித் சர்மா முதலில் அதிரடி காட்ட, சுப்மன் கில் மதுவாக ஆரம்பித்தார். இதன் காரணமாக அவர் அரை சதத்தை நோக்கி மிக வேகமாக முன்னேறினார்.

இன்றைய போட்டியில் ரோஹித் சர்மா 48 பந்துகளுக்கு ஏழு பவுண்டரி மற்றும் இரண்டு சிக்ஸர்களுடன் 53 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். ஆசிய கோப்பையில் தொடர்ச்சியாக ரோஹித் சர்மாவுக்கு இது மூன்றாவது அரைசதம் ஆகும்.

- Advertisement -

மேலும் இந்தப் போட்டியில் ரோகித் சர்மா சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் பத்தாயிரம் ரண்களை கடந்து சச்சின், டிராவிட், விராட் கோலி, கங்குலி, தோனி ஆகியோரது எலைட் பிரிவில் சேர்ந்தார். மேலும் 241 இன்னிங்ஸில் பத்தாயிரம் ரன்களை எட்டி, மிகக் குறைந்த இன்னிங்சில் பத்தாயிரம் ரன்களை ஒருநாள் கிரிக்கெட்டில் எட்டிய இரண்டாம் வீரர் என்ற சாதனையை படைத்தார்.

கிரிக்கெட் வர்ணனையில் இருந்த கவுதம் கம்பீர் ரோகித் சர்மா குறித்து பேசுகையில் “ரோகித் சர்மா இன்று ரோகித் சர்மாவாக இருக்கிறார் என்றால் அதற்கு முக்கிய காரணம் மகேந்திர சிங் தோனிதான். ரோகித் சர்மா ஆரம்பக் கட்டத்தில் போராட்டத்தில் இருந்த பொழுது அவருக்கு தொடர்ந்து அவர் ஆதரவு அளித்தார்.

ரோகித் சர்மா இந்த பத்தாயிரம் ரன்களை மிகவும் கடினப்பட்டு எடுத்திருக்கிறார். இந்த ரன்னின் மதிப்பை ரோகித் சர்மா புரிந்தவராக இருப்பார். ஒரு கேப்டனாக மற்ற வீரர்களை அவர் ஆதரிப்பதற்கு அவருடைய அனுபவங்கள் உதவிகரமாக இருக்கும்!” என்று கூறி இருக்கிறார்!