இந்த முறை உலக கோப்பை ஜெயிக்கனும்.. சோக்கர்ஸ் ஆகக்கூடாது.. இதை செய்யுங்க – காலிஸ் தென் ஆப்பிரிக்க வீரர்களுக்கு அறிவுரை!

0
151
Kallis

உலகக் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா 2000 ஆவது ஆண்டில் அசுரத்தனமான பலத்தோடு, உலகின் எல்லா கிரிக்கெட் அணிகளையும் அசாதாரணமாக வீழ்த்தக்கூடிய வகையில் ராஜாவாக வலம் வந்தது!

இங்கிலாந்தில் 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை ஸ்டீவ் வாக் தலைமையில் ஆஸ்திரேலியா அணி கைப்பற்றியதில் இருந்து அவர்களது ஆதிக்க காலம் ஆரம்பித்தது.

- Advertisement -

ஆனால் அந்த உலகக் கோப்பையை வெல்லும் அணியாக அதிகபட்சம் கணிக்கப்பட்ட அணி தென் ஆப்பிரிக்க அணிதான். அதற்கேற்றார் போல அவர்களது செயல்பாடும் அந்த உலகக் கோப்பையில் இருந்தது. அவர்கள் அரையிறுதிக்கும் வந்தார்கள்.

இதனால் வரை நடைபெற்ற உலகக்கோப்பை போட்டிகளில் ஆஸ்திரேலியா தென்னாப்பிரிக்கா 1999 ஆம் ஆண்டு மோதிய அந்த போட்டியை யாராலும் மறக்க முடியாது. ஐந்து பந்துக்கு ஒரு ரன் தேவை என்ற நிலையில், கைவசம் ஒரு விக்கெட் இருக்க, அபாயகரமான லான்ஸ் க்ளூஸ்னர் பேட்டிங்கில் இருக்க, பதட்டத்தில் ஓடி ஆலன் டோனால்ட் ரன் அவுட் ஆக, தென் ஆப்பிரிக்க உலகக் கோப்பை இறுதிப் போட்டி கனவும் உலகக்கோப்பை கனவும் அத்தோடு தகர்ந்தது.

தென் ஆப்பிரிக்க நாட்டில் நிலவி வந்த நிறவெறி தென் ஆப்பிரிக்க அணியிலும் நிலவியது. இதன் காரணமாக சர்வதேச கிரிக்கெட்டில் ஐசிசி ஆப்பிரிக்க அணி விளையாட ஐசிசி தடை விதித்தது. இதற்கு அடுத்து நிலைமைகள் சரியாக 1992 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் தென் ஆப்பிரிக்க அணி பங்கேற்றது. பங்கேற்ற அந்த உலகக் கோப்பையிலேயே அரையிறுதிக்கு தகுதி பெற்றது. மேற்கொண்டு 99, 2007, 2015ஆம் ஆண்டுகளுக்கு அரையிறுதிக்கு தகுதி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியாமல் வழக்கம்போல் வெளியேறியது.

- Advertisement -

தற்பொழுது உலகக்கோப்பையில் சோக்கர்ஸ் என அழைக்கப்படும், தென் ஆப்பிரிக்க நிலை குறித்து பேசி உள்ள அந்த அணியின் லெஜன்ட் காலிஸ் கூறும் பொழுது “கிரிக்கெட் உலகில் தென் ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு மிக முக்கியக் காரணம், உலகக் கோப்பைக்கு முன் நாங்கள் விளையாடி வரும் அதே பாணியிலான கிரிக்கெட்டை பேணுவதுதான்.

நாங்கள் உலகக் கோப்பைக்கு முன்பு மிக நன்றாக விளையாடுவதை பார்க்கிறோம். ஆனால் உலக கோப்பையில் விஷயங்கள் அப்படியே மாறுகின்றன. வெற்றியை மிகத் தீவிரமாக விரும்புவதால் இது நடக்கலாம். வீரர்கள் தங்கள் ஆர்வத்தில் தங்கள் பங்கை மீறிப் போகலாம்.

நீங்கள் உங்களுக்கு கொடுக்கப்பட்ட ரோலில் கச்சிதமாக இருந்து, உங்களின் சக வீரர்கள் மீது நம்பிக்கை வைத்து, உங்களுக்கு இதனால் வரை வெற்றியைத் தந்த உங்கள் கிரிக்கெட் பிரண்டை அப்படியே தொடருங்கள்!” என்று கூறியிருக்கிறார்!