இந்தியா டாஸ் வின்.. அதிரடியான முடிவுகள்.. முக்கிய வீரர்களில் ஒருவருக்கு மட்டுமே இந்திய அணியில் இடம்!

0
529
Rohit

கிரிக்கெட் உலகத்தில் மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டிக்கான டாஸ் என்று அகமதாபாத் மைதானத்தில் வீசப்பட்டு இருக்கிறது!

இன்றைய போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீசுவது என தீர்மானித்திருக்கிறார். இந்திய அணியில் ஒரு மாற்றமாக இசான் கிஷான் வெளியேற்றப்பட்டு அவருடைய இடத்தில் கில் உள்ளே வந்திருக்கிறார்.

- Advertisement -

சர்துல் தாக்கூர் இடத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் இல்லை முகமது ஷமி இருவரில் யாராவது கொண்டு வரப்படுவார்கள் என்று அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்திய அணி நிர்வாகம் கடந்த போட்டிக்கு வைத்திருந்த பவுலிங் யூனிட்டயே இந்த முறையும் வைத்துக் கொண்டிருக்கிறது.

பாகிஸ்தான் அணித்தரப்பை எடுத்துக் கொண்டால் அவர்கள் இலங்கைக்கு எதிராக எந்த அணியை வைத்து விளையாடினார்களோ அதே அணியை வைத்து இந்த போட்டியிலும் விளையாடுகிறார்கள். வெற்றி பெற்ற அணியில் எந்த மாற்றத்தையும் அவர்கள் விரும்பவில்லை.

டாஸ் நிகழ்வுக்கு பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா “நாங்கள் முதலில் பந்து வீசுகிறோம். இதைவிட ஒரு அருமையான சூழல் இருக்க முடியாது. நிச்சயம் நம்மில் பல பேர் அசாதாரணமான ஒன்றை அனுபவிக்கப் போகிறோம். இது ஒரு நல்ல டிராக் மேற்கொண்டு அதிகம் மாறப்போவது கிடையாது.

- Advertisement -

பனிப்பழிவு ஒரு பெரிய காரணியாக இருக்கலாம் அதன் காரணமாக நாங்கள் முதலில் பந்து வீசுகிறோம். இங்கு வந்து சிறந்த ஆட்டத்தை தர நாங்கள் விரும்புகிறோம். அணியின் சூழ்நிலையை மிக நிதானமாக வைத்திருப்பது இந்த நேரத்தில் முக்கியம்.

இசான் கிஷானுக்கு பதிலாக இந்த முறை கில் வந்திருக்கிறார். அவரை விளையாட முடியாமல் போனது துரதிஷ்டவசமானது. எங்களுக்கு தேவைப்படும் பொழுது அவர் சிறப்பாக விளையாடி இருந்தார். அதே சமயத்தில் தில் ஒரு வருடமாக அணிக்காக மிகச் சிறப்பாக விளையாடியிருக்கிறார். அவர் இந்த மைதானத்தில் விளையாடுவதை நாங்கள் விரும்புகிறோம்!” என்று கூறியிருக்கிறார்!

பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் கூறும்பொழுது “நாங்களும் முதலில் பந்து வீசத்தான் விரும்பினோம். நாங்கள் இரண்டு போட்டிகளில் நல்ல வெற்றிகளை பெற்றிருக்கிறோம். இதன் மூலம் எங்களுக்கு நம்பிக்கையும் தைரியமும் அதிகரித்திருக்கிறது. நாங்கள் இதை ரசிப்போம். எங்கள் துறைகளில் நாங்கள் நன்றாக இருக்கிறோம். எங்களுக்கு இரண்டு பயிற்சி அமர்வுகள் கிடைத்தது. நாங்கள் அதே அணியுடன் விளையாட இருக்கிறோம்!” என்று கூறியிருக்கிறார்!