தென்னாப்பிரிக்க ஏ அணிக்கு எதிரான தொடர்.. கோலி, ரோகித் பங்கேற்பார்களா? தேர்வுக்குழு முக்கிய முடிவு

0
84

இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான ரோஹித் சர்மாவும் விராட் கோலியும் தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள்   தொடரில் பங்கேற்பார்களா  என்று சந்தேகம்  எழுந்துள்ளது. இந்தியா ஏ அணி, ராஜ்கோட்டில் நவம்பர் 13, 16 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடைபெறும் ஒரு நாள் போட்டிகளில்  தென்னாப்பிரிக்கா ஏ அணியை எதிர்கொள்ளும்.

ஆனால், தற்போது சர்வதேச அளவில் ஒரு நாள் போட்டிகளில் மட்டுமே விளையாடும் இந்த இரு மூத்த வீரர்களும் இந்தியா ஏ அணியில் இடம்பெறுவார்களா என்ற கேள்வி எழுந்தது. இந்த தொடருக்கான அணியை பிசிசிஐ விரைவில் இந்தியா ஏ அணியை அறிவிக்க உள்ளது.

- Advertisement -

அணியில் இடமிருக்குமா?

இருப்பினும், அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழு இந்தத் தொடருக்கு தனித்துவமான திட்டங்களைக் கொண்டுள்ளது.  கோலி, ரோகித் என இரு மூத்த வீரர்களையும் சேர்க்க விரும்பவில்லை என்று தெரிகிறது. ரோஹித் மற்றும் கோலி, அனைத்து வடிவங்களிலும் இந்தியாவை வழிநடத்தியவர்கள்.

சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றனர். அங்கு இருவரும் அபாரமாக்ல் விளையாடினர். . ரோஹித், முதல் போட்டியில் குறைவான ஸ்கோர் அடித்தாலும், பிறகு 73 மற்றும் ஆட்டமிழக்காமல் 121 ரன்கள் எடுத்து தொடர் நாயகன் விருதை வென்றார்.

- Advertisement -

தென்னாப்பிரிக்க தொடர் அட்டவணை:

கோலி, முதல் இரு போட்டிகளில் டக் அவுட் ஆன பிறகு, இறுதி ஒரு நாள் போட்டியில் ஆட்டமிழக்காமல் 74 ரன்கள் எடுத்து தொடரை முடித்தார். தற்போது, இந்தியா ஏ அணி பெங்களூருவில் உள்ள சிறப்பு மையத்தில் தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான இரு போட்டிகள் கொண்ட சிவப்பு பந்து தொடரில் ஈடுபட்டுள்ளது.

ரிஷப் பண்ட் தலைமையிலான அணி, நவம்பர் 2ஆம் தேதி முடிவடைந்த முதல் நான்கு நாள் போட்டியை வென்றது. இரண்டாவது போட்டி நவம்பர் 6ஆம் தேதி வியாழக்கிழமை அதே இடத்தில் தொடங்குகிறது. இந்திய தேர்வாளர்கள் விரைவில் கூடி, தெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரு டெஸ்ட் தொடர் மற்றும் இந்தியா ஏ போட்டிகளுக்கான அணிகளை இறுதி செய்ய உள்ளனர்.

இதையும் படிங்க: பழைய வெஸ்ட் இண்டீஸ் திரும்பி வந்துடுச்சி.. நியூசிலாந்துக்கு எதிராக பட்டையை கிளப்பிய ஹோப், சேஸ்..சாண்டனர் போராட்டம் வீண்

டெஸ்ட் அணி வெஸ்ட் இண்டீஸ் தொடரைப் போலவே மாற்றமின்றி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரிஷப் பண்ட், என். ஜெகதீசனுக்கு பதிலாக இடம்பெறுவார்.  முதல் டெஸ்ட் கொல்கத்தாவில் நவம்பர் 14 முதல் 18 வரை மற்றும் கவுகாத்தியில் நவம்பர் 22 முதல் 26 வரை இரு டெஸ்ட் போட்டிகளில் விளையாடும். சிவப்பு பந்து தொடருக்குப் பிறகு  மூன்று ஒரு நாள் போட்டிகள் நடைபெறும். இதில் ரோஹித் மற்றும் கோலி மீண்டும் இடம்பெறுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -