பழைய வெஸ்ட் இண்டீஸ் திரும்பி வந்துடுச்சி.. நியூசிலாந்துக்கு எதிராக பட்டையை கிளப்பிய ஹோப், சேஸ்..சாண்டனர் போராட்டம் வீண்

0
136

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி ஐந்து டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது. அதன்பின் ஒரு மாத இடைவெளி கழித்து மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்கிறது. இந்த தொடரின் முதல் டி20 போட்டி ஆக்லாந்து நகரில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் தொடக்க வீரர் பிராண்டன் கிங் 3 ரன்களிலும், எத்தான்ஷி 16 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். அக்கீம் ஆகஸ்த்  2 ரன்களில்ஆட்டம் இழக்க சாய் ஹோப், அதிரடியாக விளையாடி மூன்று பவுண்டரி, நான்கு சிக்ஸர்களுடன் 39 பந்துகளில் 53 ரன்கள் அடித்தார்.

- Advertisement -

165 ரன்கள் இலக்கு:

இறுதியில் ரோமன் போவெல் 23 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார். இதில் இரண்டு பவுண்டரி, 2 சிக்சர் அடங்கும். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்திருந்தது. இதனை அடுத்து 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது.

தொடக்க வீரராக டீம் ராபின்சன் களமிறங்கி 22 ரன்களும், கான்வே 13 ரன்களும் எடுத்திருந்தனர். 21 ரன்களில் ரச்சின் ரவீந்திரா ஆட்டம் இழக்க மார்க் சாப்மேன் ஏழு ரன்களிலும், டாரல் மிட்செல் 13 ரன்களிலும் மைக்கேல் பிரஸ்வெல் 1 ரன்னிலும் ஆட்டம் இழக்க, ஒரு கட்டத்தில் நியூசிலாந்து அணி 9 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்து தடுமாறியது.

- Advertisement -

போராடிய ஷார்ட்னர்:

அப்போது கீழ் வரிசையில் விளையாடிய கேப்டன் மிட்செல் ஷார்ட்னர் தன்னுடைய அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெஸ்ட் இண்டீஸ்க்கு கடும் நெருக்கடி ஏற்படுத்தினார். எட்டு பவுண்டரி, 2 சிக்சர் என 28 பந்துகளில் 55 ரன்கள் எடுத்தார். இதன் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் இலக்கு அருகே நியூசிலாந்து அணி வந்தது.

இதையும் படிங்க: 2 வீரர்களால் முடிவுக்கு வரும் பரிசோதனை.. இந்திய அணி t20 உலக கோப்பைக்கு தயார்.. 3வது முறையாக வெல்வோமா?

எனினும் அவருக்கு துணையாக யாரும் நிற்காததால் நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்திருந்தது. இதன் மூலம் ஏழு ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. கடைசி ஓவரில் வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட நியூசிலாந்து அணி ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர், ஒரு டபுள் என மொத்தமே 12 ரன்கள் தான் அடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

- Advertisement -