துலீப் ட்ராபி தொடரின் ஃபைனல் மேட்ச்சில் சவுத் ஜோன் டீமை வீழ்த்தி ஈஸ்ட் ஜோன் டீம் சாம்பியன் பட்டம் வென்றதை தொடர்ந்து, அந்த டீமின் கேப்டன் இஷான் கிஷன் மற்றும் இளம் வைஸ் கேப்டன் வைபவ் சூர்யவன்ஷி இடையேயான ஜாலியான உரையாடல் வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
போட்டியின் போது எடுக்கப்பட்ட டிஆர்எஸ் ரிவ்யூ முடிவுகள் பெரிய அளவில் பேசப்பட்ட நிலையில், வெற்றிக்கு பிறகு இருவரும் நேர்காணலில் பங்கேற்று ஒருவரை ஒருவர் கிண்டல் செய்து கொண்டனர்.
இந்த ஜாலி உரையாடலின் போது இஷான் கிஷன் பேசும்போது “ரிவ்யூ எடுத்ததில் அனைத்து க்ரெடிட்டையும் அவனே எடுத்துக் கொண்டான், நான் ரிவ்யூ எடுக்கத்தான் போய்க் கொண்டிருந்தேன், ஆனால் அவன் என்னிடம் வந்து மிகவும் கான்ஃபிடெண்டாக பேசியதால் இன்டர்நெட்டில் அனைவரும் வைபவ்தான் எல்லாவற்றையும் செய்தார் என்று பாராட்டி வருகின்றனர், அந்த ரோலை அவன் மிகச் சிறப்பாக செய்திருக்கிறான்” என்று கூறி இருக்கிறார்.
அதற்கு பதிலளித்து வைபவ் சூர்யவன்ஷி பேசும்போது “நீங்கள் ஃபீல்டை விட்டு வெளியே சென்றிருந்த நேரத்தில் டீமை வழிநடத்தி ரிவ்யூ எடுத்தது யார் என்பதையும் கொஞ்சம் சொல்லுங்கள், மேலும் பேட்டிங்கில் மட்டுமல்லாமல் டீமில் இருக்கும் ஜுனியர் மற்றும் சீனியர் பிளேயர்களை அவர் கவனித்துக் கொள்ளும் விதமும் சிறப்பாக இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.
தொடர்ந்து பேசிய இஷான் கிஷன் “வைபவ் ஒரு சிறந்த பிளேயர் மட்டுமல்லாமல் அனைவரிடமும் அன்பாக பழகும் நல்ல பையன், இது அவனது ஆரம்பம்தான், வரும் காலத்தில் அவன் மேலும் பல மேட்ச்களில் சிறப்பாக விளையாடி பல சாதனைகளை படைப்பான்” என்று கூறி இருக்கிறார்.






