பாபர் ஒரு பயந்தாங் கொள்ளி.. என் இடத்துல வேற யார் இருந்தாலும் நடக்கிறது வேற – அக்தர் கோபம்

0
25

​இங்கிலாந்து தொடரில் பாகிஸ்தான் கிரிக்கெட் டீம் தொடர் தோல்விகளை சந்தித்து வரும் நிலையில், கேப்டன் பாபர் அசாமின் ஆளுமை மற்றும் முடிவெடுக்கும் திறன் குறித்து அந்த நாட்டின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

​டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் பின்னடைவை சந்தித்து வருவதுடன், தொடரின் நடுவே பல பிளேயர்கள் மாற்றம் செய்யப்பட்ட சூழலில் பாபர் அசாம் அமைதி காப்பது குறித்து சோயப் அக்தர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

- Advertisement -

​இதுகுறித்து சோயப் அக்தர் பேசும்போது “பாபர் அசாமால் உறுதியான முடிவுகளை எடுக்க முடியவில்லையென்றால், அது அவருடைய சொந்த ஆளுமை சார்ந்த பிரச்சனை, அவருடைய ஆளுமைதான் அவரது கேம் பிளானிலும், அவர் எடுக்கும் முடிவுகளிலும் அப்படியே வெளிப்படுகிறது” என்று கூறி இருக்கிறார்.

​தொடர்ந்து பேசிய சோயப் அக்தர் “என் இடத்தில் வேறு யாராவது இருந்தால் இந்நேரம் என்ன நடந்திருக்கும் என்று அனைவருக்கும் தெரியும், ஆனால் இந்த டீமிடம் இருந்தும், கேப்டனிடம் இருந்தும் பெரிய அளவில் எதையும் எதிர்பார்க்க முடியாது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

​மேலும் பாகிஸ்தான் கிரிக்கெட் சிஸ்டம் குறித்து கூறுகையில் “தற்போது நடந்து கொண்டிருக்கும் தோல்விகள் அனைத்தும் நமது சிஸ்டத்தின் தோல்விதான், நாம் செய்த முதலீட்டின் முடிவுதான் நம் கண்முன்னே நிற்கிறது, இவர்களிடம் இருந்து எந்தவொரு ஸ்ட்ராங்கான முடிவையும் எதிர்பார்க்க முடியாது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -