இந்தியாவில் நடக்கும்.. 2031 உலக கோப்பை வர.. ஓடிஐ இருக்குமா.. கிரேம் ஸ்மித் தைரியமான பேட்டி

0
2147

கிரிக்கெட் தொடங்கிய காலகட்டத்தில் ஒருநாள் போட்டி முதலில் 60 ஓவர்களாக விளையாடப்பட்டது. பின்னர் மக்களுக்கு சலிப்பை ஏற்படுத்தாத வண்ணம், சுவாரசியம் அளிக்கும் வகையில் 10 ஓவர்கள் குறைக்கப்பட்டு 60 ஓவர் போட்டி 50 ஓவர்களாக நடத்தப்பட்டது.

அப்போது 50 ஓவர்கள் வரை முழுமையாக ஒரே ஒரு பந்து மட்டுமே பயன்படுத்தப்படும். இறுதிக்கட்டத்தில் பந்து வீச்சாளர்கள் ரிவர்ஸ் ஸ்விங் செய்ய பழைய பந்து உதவியது. இப்போது ரன்கள் அடிக்கும் நோக்கில் ஒரு இன்னிங்ஸ்க்கு இரண்டு பந்துகள் பயன்படுத்தப்படுகிறது. டி20 கிரிக்கெட் தொடரின் வரவால் ஒருநாள் கிரிக்கெட்டின் மீது மக்களுக்கு ஆர்வம் குறைந்து கொண்டே வருகிறது.

- Advertisement -

ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டைப் பொருத்தவரை அப்போது இருந்த பழைய ஆர்வம் இன்னும் அப்படியே தொடர்கிறது. ஆனால் ஒருநாள் கிரிக்கெட்டை பொருத்தவரை புதிய மாற்றங்கள் செய்த போதிலும் அது ரசிகர்களைப் பெரிதாகக் கவரவில்லை. இது குறித்து தென்னாப்பிரிக்கா அணியின் முன்னாள் ஜாம்பவான் கிரீம் ஸ்மித் கருத்து கூறியுள்ளார்.

தென்னாபிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் ஆன கிரேம் ஸ்மித், இதுவரை 197 ஒரு நாள் போட்டி மற்றும் 33 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் கேப்டனாக இருந்த காலகட்டத்தில் தென் ஆப்பிரிக்கா மிகச் சிறந்த வெற்றிகளைப் பெற்றுள்ளது. ஸ்மித் இதுவரை 117 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார்.

தென்னாப்பிரிக்கா டி 20 லீக்கின் கமிஷனர் ஆக இருக்கும் ஸ்மித், எதிர்காலத்தில் இரு உலகக் கோப்பைகளுக்கு இடையே 50 ஓவர் போட்டி மிகவும் குறைவாகவே நடத்தப்படும் என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறும் பொழுது
“வணிக ரீதியாக வெற்றி பெற்றுள்ள டி20 கிரிக்கெட் நீண்ட வடிவமாக அது மக்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தும். இன்னும் இரண்டு ஒரு நாள் உலகக்கோப்பைகள் ஒளிபரப்பாளர்களுக்கு விற்கப்பட்டுள்ளன.

- Advertisement -

2027ஆம் ஆண்டு நடக்கும் உலகக்கோப்பை தென்னாப்பிரிக்காவிலும் மற்றும் 2031இல் இந்தியாவிலும் நடத்தப்படுகிறது. ஐபிஎல் மற்றும் வெளிநாடுகளில் நடத்தப்படும் உள்ளூர் டி20 தொடர்களினால் ஒரு நாள் போட்டிகள் குறைவாகவே நடத்தப்படும். ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மக்களிடம் ஆதரவு குறைந்து கொண்டே வருகிறது.

ஆனால் டெஸ்ட் கிரிக்கெட் எப்போதும் கவரக்கூடிய வகையில் அமைந்துள்ளது. மேலும் டெஸ்ட் கிரிக்கெட் ஆறு முதல் எட்டு நாடுகளில் நடத்தப்படும் வகையிலேயே அமைந்துள்ளது. கடந்த எம்சிசி கிரிக்கெட் கமிட்டியில் நான் ஒரு பகுதியாக இருந்த போது டெஸ்ட் கிரிக்கெட்டை பாதுகாக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொண்டோம்.

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் டி20 கிரிக்கெட் தொடர் வருடத்திற்கு நான்கு வாரங்கள் நடைபெறுகிறது. இது ஒவ்வொரு பருவத்திலும் சிறப்பாக இருக்கும்” என்று கூறி இருக்கிறார். தென்னாபிரிக்காவில் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெறுவதால் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தென்னாப்பிரிக்க ஏ அணியே செல்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.