இந்திய அணியும் அரையிறுதிக்கு வராமல் போகுமா? ஷிகர் தவான் அதிரடி ட்வீட்.. புள்ளி பட்டியல் குறித்து கணிப்பு!

0
1292
Dhawan

ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் தற்போது அனைத்து அணிகளும் ஐந்து போட்டிகளை விளையாடி முடிக்க இருக்கின்றன. லீக் சுற்று பாதி முடிய இருக்கிறது.

இந்த இடத்தில் இந்திய அணி தான் விளையாடிய ஐந்து போட்டிகளில் ஐந்தையும் வென்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது. மீதமுள்ள நான்கு போட்டிகளில் நெதர்லாந்து மற்றும் இலங்கை அணிகளை சந்திக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

தென்னாபிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் ஐந்து போட்டிகளில் நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று தற்போது புள்ளி பட்டியலில் இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களில் இருக்கின்றன. இந்த அணிகள் சில பெரிய அணிகளுடன் விளையாட இருக்கின்றன.

நான்காவது இடத்தில் ஐந்து போட்டிகளில் மூன்று போட்டிகளை வென்று ஆறு புள்ளிகள் உடன் ஆஸ்திரேலியா அணி இருக்கிறது. இவர்கள் அடுத்து ஒரு போட்டியை தோற்று கூட மீதம் ஒன்று போட்டிகளை வென்றால் அரையிறுதியில் இருப்பார்கள் என்று நம்பலாம்.

அதே சமயத்தில் இங்கிலாந்து நான்கில் மூன்று போட்டிகளை தோற்று இருக்கிறது. எனவே கட்டாயம் இவர்கள் மீதமுள்ள ஐந்து போட்டிகளையும் வென்றே ஆக வேண்டும். இந்த ஐந்து போட்டிகளில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் என பெரிய அணிகள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது இங்கிலாந்துக்கு அரையிறுதி மிகவும் கடினமான ஒன்றாகவே கணிக்கப்படுகிறது.

- Advertisement -

இதில் மிக முக்கியமாக நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க, ஆஸ்திரேலியா அணிகளில் ஏதாவது ஒரு அணி மேற்கொண்டு தொடர்ச்சியான தோல்விகளை சந்திப்பதோ, அதே சமயத்தில் இங்கிலாந்து தொடர்ச்சியான வெற்றிகளை பெறுவதோ, அரை இறுதியில் பெரிய மாற்றங்களை கொண்டு வரும் என்பது குறிப்பிடத்தக்கது

தற்பொழுது இந்த அரையிறுதி வாய்ப்புகள் பற்றி டிவிட் எழுதியுள்ள ஷிகர் தவான் கூறும்பொழுது “உலகக்கோப்பையில் ஒவ்வொரு போட்டியும் புள்ளி பட்டியலை மாற்றி அமைக்கிறது. இந்தியா நியூசிலாந்து மற்றும் சவுத் ஆப்பிரிக்கா ஆகிய மூன்று அணிகளும் அரையிறுதிக்கான தங்கள் இடங்களை பெறுவதாக தெரிகிறது.

இப்பொழுது நான்காவது இடத்திற்கான போட்டிதான் நடந்து கொண்டிருக்கிறது. இந்த அணிக்கு நல்ல ரன் ரேட் தற்பொழுது தேவையாக இருக்கிறது. இந்தியா, நியூசிலாந்து, சவுத் ஆப்பிரிக்கா இதில் ஏதாவது ஒரு நாடு அரையிறுதிக்கு வராமல் போனால் அது அதிர்ச்சிக்குரிய ஒன்று. இதுகுறித்து நீங்கள் என்ன நினைக்கிறிர்கள்? உங்கள் எண்ணங்களை பகிரவும்!” என்று குறிப்பிட்டிருக்கிறார்.