சூர்யா இஷான் நாளை விளையாடுவார்களா? – பேட்டிங் பயிற்சியாளர் தெரிவிப்பு!

0
225
ICT

இந்தியா வந்துள்ள இலங்கை ஆண்கள் கிரிக்கெட் அணி முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இழந்தது. அடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை முதல் இரண்டு ஆட்டங்களில் தோற்று இழந்திருக்கிறது!

இந்த நிலையில் நாளை தொடரின் கடைசி மற்றும் மூன்றாவது போட்டி கேரள மாநிலம் திருவனந்தபுரம் மைதானத்தில் நடக்கிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தற்பொழுது அங்கு முகாமிட்டு உள்ளார்கள்!

- Advertisement -

இந்தத் தொடரை இந்திய அணி முதல் இரண்டு போட்டிகளை வென்று கைப்பற்றி விட்டதால் முதல் இரண்டு போட்டிகளில் விளையாடாத இசான் கிஷான் மற்றும் சூரியகுமார் யாதவ் இருவருக்கும் மூன்றாவது போட்டியில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்தக் கேள்விகளுக்கு இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் பதிலளித்துள்ளார். மேலும் இவர்கள் இருவரும் விளையாடும் அணிக்கு வெளியே வைக்கப்படுவது ஏன் என்பது குறித்தும் பேசியிருக்கிறார்.

விக்ரம் ரத்தோர் கூறும் பொழுது
” அவர்கள் உண்மையில் விளையாடும் அணிக்கு வெளியில் இருக்க வேண்டிய கட்டாயத்தில் தற்பொழுது இல்லை என்பதுதான் உண்மை. அவர்கள் தற்போது வெளியே இருக்கிறார்கள் என்றால் அவர்களை விட கொஞ்சம் வேறு யாரோ நன்றாக செயல்படுகிறார்கள் என்ற புரிதல் அவர்களுக்கு இருக்கிறது. அவர்கள் தங்களுக்கான வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டும். அதற்கு அவர்கள் தயாராகி வருகிறார்கள். அவர்கள் கடினமாக உழைக்கிறார்கள் மற்றும் பயிற்சி செய்கிறார்கள். வாய்ப்பு எப்பொழுதெல்லாம் கிடைக்கிறதோ அப்பொழுதெல்லாம் சிறப்பாக செயல்பட்டு அவர்கள் தங்களுக்கான இடத்தை உறுதி செய்வார்கள்” என்று கூறியிருக்கிறார்!

- Advertisement -

மேலும் இஷான் மற்றும் சூரியா பற்றி பேசியுள்ள அவர் ” இஷான் தற்பொழுது தொடக்க ஆட்டக்காரராகவே அணியில் எடுக்கப்பட்டுள்ளார். ஆனால் நாங்கள் ஒரு பேட்டிங் யூனிட் ஆக நெகிழ்வாகவே இருக்கிறோம். இஷான் போன்ற ஒருவரை அணி நிர்வாகம் நடு வரிசையில் முயற்சிக்க வேண்டும் என்று நினைத்தால் அதையும் செய்வோம். சூர்யாவுக்கு அபார ஆற்றல் உள்ளது. அவர் டி20 போட்டிகளில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவருக்கு வாய்ப்பு கிடைக்கும்போது அதை பயன்படுத்தி அவர் மிகச் சிறப்பாக செய்வார் என்று நான் நம்புகிறேன். அவர் பன்முகத்தன்மை கொண்ட வீரர் அணியில் மற்றவர்களும் அப்படித்தான் இருக்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார்!