ஆர்சிபி ரசிகர்கள் தான் சிறந்தவங்கனு சொன்னாங்க.. கோலிகிட்ட நான் நேர்ல பார்த்தேன் – வில் ஜேக்ஸ் பேட்டி

0
247
Jacks

நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி லீக் சுற்றின் தங்களுடைய கடைசி போட்டியில் சிஎஸ்கே அணிக்கு எதிராக, தங்களுடைய சொந்த மைதானத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த நிலையில் அந்த அணியில் இருந்து நாடு திரும்பியிருக்கும் இங்கிலாந்து வீரர் வில் ஜேக்ஸ் விராட் கோலி பற்றி பேசி இருக்கிறார்.

ஆர்சிபி அணி சிஎஸ்கே அணி எதிராக விளையாடிய கடைசி போட்டியில், அந்த அணியின் இங்கிலாந்து வீரர் வில் ஜெராக்ஸ் பாகிஸ்தானுக்கு எதிராக டி20 தொடரில் பங்கேற்பதற்காக நாடு திரும்பிவிட்டார். அந்த குறிப்பிட்ட போட்டியில் அவர் விளையாடவில்லை.

- Advertisement -

அவருடைய இடத்தில் விளையாடிய மேக்ஸ்வெல் கடைசிக் கட்டத்தில் குறிப்பிடத் தகுந்த ரன்களை எடுத்ததோடு பந்து வீச்சிலும் சிறப்பாக செயல்பட்டார். ஒட்டு மொத்தத்தில் ஆர்சிபி அணியின் தற்போதைய செயல்பாடு மிகவும் சிறப்பான ஒன்றாக இருந்தது. அவர்கள் அபாரமான முறையில் விளையாடி பிளே ஆப் சுற்றுக்கு தயாராகி இருக்கிறார்கள்.

இந்த நிலையில் விராட் கோலி உடன் இணைந்து விளையாடியது குறித்து வில் ஜேக்ஸ் மிகவும் பிரமிப்புடன் பேசியிருக்கிறார். இவர் நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத்துக்கு எதிராக சதம் அடித்த பொழுது, இவர் ஆரம்ப நேரத்தில் தடுமாறிக் கொண்டிருந்தார். அப்பொழுது தேவையான ரன்களை விராட் கோலியை எடுத்து இவரை அழுத்தத்தில் இருந்து காப்பாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து வில் ஜேக்ஸ் தன்னுடைய பேட்டியில் கூறும்பொழுது “நான் விராட் கோலியை சந்தித்தது மிக மிக எதார்த்தமான ஒன்றாக இருந்தது. ஒரு கால்பந்து வீரருக்கு இருக்கும் வரவேற்பை விட விராட் கோலிக்கு ரசிகர்களின் ஆதரவு மிகப்பெரிய அளவில் இருந்தது. அவருடைய ஆராவும் மிகப் பெரியது.

- Advertisement -

இதையும் படிங்க : சிஎஸ்கே பேசாம ஆர்சிபிக்கு ஒரு ஐபிஎல் கப்ப கொடுக்கலாம்.. ஊர்வலமே நடத்துவாங்க – அம்பதி ராயுடு பேச்சு

எல்லோரும் என்னிடம் ஆர்சிபி ரசிகர்கள்தான் சிறந்தவர்கள் என்று சொன்னார்கள். ஆனால் இப்போது எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை பார்த்த போது ஆச்சரியமாக இருந்தது. அதை நான் நேரில் பார்த்தது என்னால் நம்ப முடியாத அளவுக்கு இருந்தது” என்று கூறியிருக்கிறார்.