36 பந்து 108 ரன்கள்.. விளாசி தள்ளிய வில் ஜேக்ஸ்.. 41 பந்தில் அதிரடி சதம்.. ஆர்சிபி குஜராத் அணியை வீழ்த்தியது

0
555
Jacks

இன்று குஜராத் அகமதாபாத் மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் பெங்களூர் அணி வீரர் வில் ஜேக்ஸ் 41 பந்தில் அதிரடி சதம் அடித்து அந்த அணியை வெற்றி பெற வைத்திருக்கிறார்.

இன்றைய போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற பெங்களூரு முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. இந்த முறை பெங்களூரு அணியில் வேகப்பந்துவீச்சாளர் பெர்குஷன் இடத்தில் மேக்ஸ்வெல் மீண்டும் இடம் பெற்றார். பெங்களூர் அணி குறைந்தபட்ச பந்துவீச்சாளர்களை வைத்து தைரியமாக போட்டிக்கு சென்றது.

- Advertisement -

முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணிக்கு சகா 4(5), கேப்டன் கில் 16(19) இருவரும் சுமாராக விளையாடி வெளியேறினார்கள். இதற்கு அடுத்து தமிழக வீரர்கள் சாய் சுதர்சன் மற்றும் ஷாருக் கான் இருவரும் இணைந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி குஜராத் அணியை காப்பாற்றினார்கள். சாய் சுதர்சன் 84(49), ஷாருக் கான் 58(30), டேவிட் மில்லர் 26(19) ரன்கள் எடுக்க, அந்த அணி 20 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் குவித்தது.

இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய பெங்களூரு அணிக்கு கேப்டன் பாப் டு பிளிசிஸ் 12 பந்தில் 24 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதற்கு அடுத்து விராட் கோலி தனி வீரராக 10 ஓவர்கள் தாண்டி ஆட்டத்தை எடுத்துச் சென்றார். இவருடன் இணைந்த வில் ஜேக்ஸ் தடுமாற்றமாக விளையாடி வந்தார்.

சிறப்பாக விளையாடிய விராட் கோலி 10 ஓவர்கள் தாண்டி அரைசதம் கடந்தார். இந்த நிலையில் வில் ஜேக்ஸ் 17 பந்துகளில் 17 ரன்கள் எடுத்திருந்தார். இதற்கு அடுத்து யாரும் எதிர்பார்க்காத வகையில் விஸ்வரூபம் எடுத்த அவர், அடுத்த 24 பந்துகளில் 83 ரன்கள் குவித்து மிரட்டி விட்டார். அத்தோடு 16 ஓவர்களில் ஆட்டத்தையும் முடித்து விட்டார்.

- Advertisement -

இதையும் படிங்க : நானும் கோலியும் எப்படினு உங்களுக்கு தெரியாது.. அவர் கிட்ட இத கத்துக்க விரும்பறேன் – கம்பீர் விருப்பம்

திடீரென தாக்கி விளையாட ஆரம்பித்த அவர் ஒட்டுமொத்தமாக இன்று 5 ப்வுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்கள் உடன் ஆட்டம் இழக்காமல் 41 பந்தில் 100 ரன்கள் அடித்தார். வெற்றிக்கு ஏழு ரன்கள் தேவைப்பட்ட நிலையில், தொடர்ந்து இரண்டு சிக்ஸர்கள் அடித்து சதத்தை எட்டி அணியையும் வெற்றி பெற வைத்தார். விராட் கோலி தன் பங்குக்கு ஆட்டம் இழக்காமல் 44 பந்துகளில் 6 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் உடன் 70 ரன்கள் எடுத்தார். இந்த ஜோடி 74 பந்தில் 166 ரன்கள் எடுத்தது. கடைசி 36 பந்துகளுக்கு மட்டும் 108 ரன்கள் இந்த ஜோடி அடித்திருக்கிறது.