என்றும் சிஎஸ்கேவின் சின்ன தல.. ரெய்னாவுக்கு தோனி செய்த செயல்.. சேப்பாக்கில் நெகிழ்ச்சி சம்பவம்

0
843

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டிக்குப் பின்னர் “சின்ன தல” சுரேஷ் ரெய்னாவுக்கு மகேந்திர சிங் தோனி செய்த நெகிழ்ச்சி சம்பவம் தற்போது ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்று வருகிறது.

சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி சென்னை அணியின் அபார பந்துவீச்சு தாக்குப்பிடிக்க முடியாமல் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரியான் பராக் 37 பந்துகளில் 45 ரன்கள், ஜுரேல் 18 பந்துகளில் 28 ரன்களும் குவித்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் சஞ்சு சாம்சன் 19 பந்துகளில் 15 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

அதற்குப் பின்னர் வெற்றி இலக்கை நோக்கி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களம் இறங்கியது. சென்னை அணியின் கேப்டன் ருத்ராஜ் ஒரு முனையில் நிதானமாக விளையாட மறுமுனையில் ரச்சின் ரவீந்திரா 18 பந்துகளில் 27 ரன்களும், டாரில் மிச்சல் 13 பந்துகளில் 22 ரன்களும், சிவம் துபே 11 பந்துகளில் 18 ரண்களும், சமீர் ரிஸ்வி எட்டு பந்துகளில் 15 ரன்கள் குவித்தனர்.

ஒரு முனையில் நங்கூரம் போல் நிலைத்து நின்று விளையாடி ருத்ராஜ் 41 பந்துகளில் 42 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் சென்னை அணியின் வெற்றியை உறுதி செய்தார். இதன் மூலம் தற்போது ஏழாவது வெற்றியை பதிவு செய்த சென்னை அணிக்கு பிளே ஆப் சுற்று வாய்ப்பு மிகவும் பிரகாசமாக இருக்கிறது. அடுத்த பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றாலே சென்னை அணி பிளே ஆப் தகுதி பெற்று விடும். தோல்வியடைந்தால் மற்ற அணிகளின் முடிவைப் பொறுத்து காத்திருக்க வேண்டி இருக்கும்.

- Advertisement -

இந்த நிலையில் போட்டி தொடங்குவதற்கு முன்பாகவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் போட்டி முடிந்த பின்னர் ரசிகர்களை சிறிது நேரம் காத்திருக்கும் படி ட்விட்டர் பக்கத்தில் பதிவினை வெளியிட்டது. இந்த பதிவு ஒருவேளை மகேந்திர சிங் தோனிக்கு சென்னை மைதானத்தில் இறுதிப் போட்டியாக இருக்குமோ? என்று ரசிகர்கள் அச்சப்படத் தொடங்கினர். பிறகு ரசிகர்களுக்கு நன்றி சொல்வதற்காகதான் அந்தப் பதிவு வெளியிடப்பட்டது என்று அதற்கு பின்னர்தான் தெரிந்தது.

தோனி மற்றும் ரெய்னா

இந்த நிலையில் மகேந்திர சிங் தோனி போட்டி முடிந்த பின்னர் ரசிகர்களை நோக்கி கையசைத்தும், டென்னிஸ் பேட்டின் மூலம் பந்துகளை ரசிகர்களை நோக்கி அடித்தும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வந்தார். அப்போது அங்கு வந்த ‘சின்ன தல ‘ என்று சிஎஸ்கே ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா தோனியை கட்டிப்பிடித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்த பதிலுக்கு தோனியும் பேட்டை கையில் கொடுத்து பந்தை ரசிகர்களை நோக்கி அடிக்கும்படி கூறினார்.

இதையும் படிங்க:ருதுராஜ் அற்புதமான ஒரு வேலையை செஞ்சார்.. என்னுடைய தனிப்பட்ட பிளான் இதுவாதான் இருந்தது – டேரில் மிட்சல் பேட்டி

விளையாடும் காலகட்டத்தில் இருந்தபோது இவர்களின் நட்பு எப்படி இருந்ததோ தற்போதும் அதற்குத் துளியும் குறைவில்லாமல் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய தோனியையும், சுரேஷ் ரெய்னாவையும் தற்போது ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். மேலும் தோனி செய்த இந்த நெகிழ்ச்சி செயல் வீடியோவாக வெளிவர தற்போது சிஎஸ்கே ரசிகர்கள் அதனை ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்.

- Advertisement -