2023 உலக கோப்பைக்கு வெஸ்ட் இண்டிஸ் அணியால் தகுதி பெறுவது கடினம்? காரணங்கள் என்ன?

0
823
Odiwc2023

இந்த ஆண்டு அக்டோபர் நவம்பர் மாதங்களில் இந்தியாவில் முதல்முறையாக முழுமையாக ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. இதற்கான போட்டி மற்றும் போட்டி நடக்கும் இடங்கள் தொடர்பான அட்டவணை சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது!

10 அணிகளைக் கொண்டு நடத்தப்படும் இந்த ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு நேரடியாக இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய 8 அணிகள் தகுதி பெற்றுள்ளன.

- Advertisement -

மேலும் இரண்டு அணிகளைக் கண்டறிவதற்காக தற்பொழுது ஜிம்பாப்வே நாட்டில் உலகக் கோப்பை தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் மொத்தம் 10 அணிகள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு முதல் சுற்று போட்டிகள் நடைபெற்றது. மொத்தமாக இந்த தொடரில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இந்தியாவில் நடக்கும் உலக கோப்பைக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதிலிருந்து இரண்டாவது சுற்றுக்கு ஏ பிரிவில் இருந்து ஜிம்பாப்வே, நெதர்லாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளும், பி பிரிவில் இருந்து இலங்கை, ஸ்காட்லாந்து ஓமன் ஆகிய மூன்று அணிகளும் இரண்டாவது சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு தகுதி பெற்றன.

இதில் இரண்டாவது சுற்றுக்கு வரும் அணி தன்னுடன் தன் குழுவில் இருந்து இரண்டாவது சுற்றுக்கும் வரும் எத்தனை அணிகளை வென்று இருக்கிறதோ, அதற்கான புள்ளிகள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த காரணத்தால் தங்களது குழுவில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நெதர்லாந்து அணிகளை வீழ்த்திய ஜிம்பாப்வே அணிக்கு நான்கு புள்ளிகள் கிடைத்தது. போலவே தனது குழுவில் இரண்டு அணிகளை வீழ்த்திய இலங்கை அணிக்கும் நான்கு புள்ளிகள் கிடைத்தது.

இந்த இரண்டு அணிகளும் சூப்பர் 6 சுற்றுக்குள் விளையாடாமலே நான்கு புள்ளிகள் உடன் வந்தன. ஸ்காட்லாந்து மற்றும் நெதர்லாந்து ஓமன் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளை வீழ்த்தி இருந்ததால் இரண்டு புள்ளிகள் உடன் இந்த சுற்றுக்கு வந்தன. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஓமன் இரண்டு அணிகளும் இந்த சுற்றுக்குள் நுழைந்த எந்த அணியையும் வீழ்த்தாததால் எந்த புள்ளிகளையும் பெறாமல் உள்ளே வந்தன.

இதில் ஏ பிரிவில் இடம் பெற்ற மூன்று அணிகளும் பி பிரிவில் இடம்பெற்ற 3 அணிகளுடன் மூன்று போட்டிகளில் விளையாடும். ஒவ்வொரு அணியும் மூன்று போட்டிகள் விளையாடிய முடித்த பிறகு, அதிலிருந்து முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் உலகக் கோப்பைக்கு தகுதி பெறுவதோடு இறுதி போட்டியில் விளையாடும்.

தற்பொழுது ஜிம்பாப்வே மற்றும் இலங்கை அணிகள் சூப்பர் 6 சுற்றின் முதல் ஆட்டத்தில் வென்று மொத்தம் 6 புள்ளிகளோடு முன்னிலையில் இருக்கின்றன. இவர்களுக்கு இன்னும் இரண்டு போட்டிகள் மீதம் இருக்கிறது.

தற்பொழுது வெஸ்ட் இண்டீஸ் அணி தங்களுக்கு டி பிரிவில் இலங்கை, ஸ்காட்லாந்து, ஓமன் ஆகிய நாடுகளுடனான மூன்று போட்டிகளையும் வெல்ல வேண்டும். அதே சமயத்தில் இலங்கை அல்லது ஜிம்பாப்வே தங்களது இரண்டு ஆட்டங்களையும் தோற்க வேண்டும். மேலும் இந்த வகையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ரன் ரேட்டும் இவர்களை விட அதிகம் இருக்க வேண்டும்.

இதுவெல்லாம் நடந்தால் வெஸ்ட் இண்டீஸ் இந்தியாவில் நடக்கும் உலகக் கோப்பைக்கு வரும். இலங்கை, ஜிம்பாப்வே இந்த இரண்டு அணிகளில் ஒரு அணி இரண்டு போட்டிகளையும் தோற்பது என்பது மிகவும் கடினம். அதே சமயத்தில் வெஸ்ட் இண்டீஸ் தங்களது மூன்று போட்டிகளையும் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. வென்றாலும் இந்த இரண்டு அணிகளை விட ரன் ரேட்டில் மேலே இருக்க வேண்டும். இந்த காரணங்களால் வெஸ்ட் இண்டீஸ் இந்த முறை இந்தியாவில் நடக்கும் உலகக்கோப்பை க்கு வருவது கடினம்!