ஹர்திக் பாண்டியா உள்நாட்டு போட்டியில் விளையாடுவாரா? சம்பள ஒப்பந்தம் எப்படி கிடைத்தது?.. தெளிவு படுத்திய பிசிசிஐ தரப்பு

0
122
Hardik

கடந்த ஆண்டு இறுதியில் தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரில் இருந்து மனச்சோர்வு என்று கூறி இசான் கிஷான் ஓய்வை கேட்டு வாங்கி வெளியேறியதாக பிசிசிஐ கூறியிருந்தது. மேலும் அவரது இந்த முடிவை மதிப்பதாக இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகமும் கூறியிருந்தது.

இந்தியா வந்த இஷான் கிஷான் எந்த போட்டிகளுக்கும் திரும்பாமல் இருந்த போதிலும், ஐபிஎல் தொடருக்கு தயாராகும் விதமாக ஹர்திக் பாண்டியா உடன் இணைந்து பயிற்சிகள் மேற்கொண்டார். அதே சமயத்தில் அவர் ரஞ்சி கிரிக்கெட் தொடரில் தனது மாநில அடியான ஜாக்கெட் அணிக்கு விளையாட செல்லவில்லை.

- Advertisement -

இதேபோல் இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கு தேர்வு செய்யப்படாமல் வெளியேற்றப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர், தமக்கு சிறிய காயம் இருப்பதாக கூறி ரஞ்சி கால் இறுதி சுற்றில் தனது மாநில அணியான மும்பை அணிக்கு விளையாடவில்லை.

இது பிசிசிஐ மிகவும் கோபப்படுத்தியது. இதற்கு முன்பாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா இந்திய அணிக்கு தேர்வாகாமல் மற்றும் காயமில்லாமல் இருக்கும் வீரர்கள் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டும், இவர்கள் இருவரும் விளையாடாதது, இவர்களை சம்பள பட்டியலில் இருந்து நீக்கும் அளவுக்கு கொண்டு சென்று விட்டது.

உள்நாட்டு கிரிக்கெட்டின் தேவையை கருத்தில் கொண்டு இந்த இரண்டு வீரர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு பல முன்னாள் வீரர்கள் தங்களுடைய ஆதரவுகளை தெரிவித்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அதே சமயத்தில் காயம் இல்லாமல் ஓய்வில் இருக்கும் ஹர்திக் பாண்டியாவுக்கு இது பொருந்துமா? என்று இர்பான் பதான் மற்றும் ஆகாஷ் சோப்ரா போன்ற உன்னால் இந்திய வீரர்கள் தங்களுடைய கேள்விகளை முன் வைத்திருக்கிறார்கள்.

தற்போது இதற்கு பிசிசிஐ தரப்பில் இருந்து ஒரு அதிகாரி கூறும் பொழுது “சம்பளப் பட்டியல் தயாரிப்பதற்கு முன்பாக ஹர்திக் பாண்டியாவிடம் பேசிய பொழுது, இந்திய அணிக்கு விளையாடாமல் தாம் வெளியில் இருக்கும் பொழுது, விஜய் ஹசாரே டிராபி, சையத் முஸ்டாக் அலி டிராபி போன்ற இந்திய உள்நாட்டு வெள்ளைப்பந்து தொடர்களில்பரோடா அணிக்காக விளையாடுவதாக உறுதி அளித்திருக்கிறார்.

இதையும் படிங்க : படிக்கல்லுக்கு வாய்ப்பு கிடைத்தால்.. துருவ் ஜுரலுக்கு நடக்கும் நல்லது.. வேற மாதிரி காம்பினேஷன்

இதன் காரணமாகவே அவர் அடுத்து சம்பளப் பட்டியலில் சேர்க்கப்பட்டார். மேலும் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் பந்து வீசும் அளவுக்கு உடல் தகுதி கொண்டிருக்கவில்லை. இதன் காரணமாகவே அவர் உள்நாட்டு டெஸ்ட் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கிரிக்கெட்டில் விளையாடுவதற்கான வாய்ப்புகள் இல்லை” என்று தெளிவுபடுத்தி இருக்கிறார்.