தினேஷ் கார்த்திக் பிளேயிங் லெவனில் இடம் பெறுவாரா? – ரிஷப் பண்ட் பளிச் பதில்!

0
181
Asiacup2022

இந்திய கிரிக்கெட்டில் எப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது வேகப்பந்து வீச்சு துறை மிகச் சிறப்பாக இயங்கி வருகிறது. உலகத்தின் எந்த நாட்டிற்கும் எந்த நாட்டு மைதானத்திலும் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் சவால் அளிக்கக் கூடிய திறமையோடு மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் இருக்கிறார்கள்!

தற்போது இதே போல இந்திய அணியில் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன்களின் எண்ணிக்கையும் மிக அதிகமாக இருக்கிறது. சஞ்சு சாம்சன், இசான் கிசான், தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட், கேஎல் ராகுல் என்று பெரிய கூட்டமே இருக்கிறது.

- Advertisement -

இந்த விக்கெட் கீப்பர்கள் பட்டியலில் தினேஷ் கார்த்திக்தான் சற்று வித்தியாசமானவர், ஏனென்றால் அவர் மீண்டும் இந்திய அணிக்குள் வந்திருக்கும் 37 வயதான வீரர். 18 ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட்டில் தன்னை நிரூபிக்க போராடி, தன் பெயருக்கு தேர்வாளர்கள் முன்னுரிமை தரும் இடத்திற்கு வந்து இருக்கிறார்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக பேட்டிங்கில் பினிஷிங் ரோலில் மிகச் சிறப்பாக செயல்பட்டார். தனி ஒருவராக நான்கைந்து ஆட்டங்களில் பெங்களூர் அணிக்கு வெற்றியை கொண்டுவந்தார். 183 என்ற மிகப்பெரிய ஸ்ட்ரைக் ரேட்டை வைத்திருந்தார்.

இதனால் இந்திய அணிக்குள் வந்த இவர், சவுத் ஆப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான டி20 தொடர்களில் தனது பேட்டிங் பினிஷிங் திறமையை மீண்டும் நிரூபித்தார். இதனால் தினேஷ் கார்த்திக்கின் பெயர் இந்திய அணியில் விக்கெட் கீப்பர்கான இடத்தில் இடம் பெற்றது. இன்னொரு விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் அணியில் இருக்கிறார்.

- Advertisement -

இந்தச் சூழலில் தினேஷ் கார்த்திக் இந்திய பிளேயிங் லெவலில் இருப்பாரா என்பது குறித்து ரிஷப் பண்ட் இடம் கேள்வி வைக்கப்பட்டது. அதற்கு அவர் ” இந்தக் கேள்வி குறித்து நாங்கள் யோசிக்கவே இல்லை. ஒவ்வொரு தனிநபரும் காலத்தில் இந்திய அணிக்காக 100 சதவீத பங்களிப்பை தர தயாராக இருக்கிறோம். ஒரு வீரர்கள் ஆடும் அணியில் இடம்பெறுவது பயிற்சியாளர் மற்றும் கேப்டன் முடிவைப் பொறுத்தது. யார் விளையாடுகிறார்கள் யாருக்கு ஓய்வு தர படுகிறார்கள் என்பதிலிருந்து அணிக்கு எந்த அளவு நன்மை கிடைக்கும் என்று பார்ப்பார்கள்” என்று தெரிவித்து இருக்கிறார்!