சம்பள காண்ட்ராக்ட் கொடுத்தும் வாங்காத நட்சத்திர 3 வெ.இ வீரர்கள்.. டி20 உலக கோப்பையில் விளையாடுவார்களா?

0
356
Pooran

அடுத்த ஆண்டு ஜூலை மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. கடந்த டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர்களில், நான்கு முறை உலகக் கோப்பையை வென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் தகுதி பெற முடியாமல் இருந்திருக்கிறது.

இந்த நிலையில் அடுத்த ஆண்டு டி20 உலக கோப்பை தொடரை நடத்துகின்ற காரணத்தினால் பெஸ்ட் இண்டிஸ் நேரடியாக உலகக் கோப்பைக்கு தகுதி பெற்று இருக்கிறது. இதன் காரணமாக அமெரிக்காவும் தகுதி பெற்றிருக்கிறது.

- Advertisement -

தற்பொழுது புதிய தேர்வாளர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் என வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் தங்களை மீண்டும் பழைய உயரத்திற்கு எடுத்துச் செல்லும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார்கள். அதற்கு தேவையான எல்லா முயற்சிகளையும் அவர்கள் செய்து வருகிறார்கள்.

அதே சமயத்தில் வெஸ்ட் இண்டீஸ் தீவுக் கூட்டத்தில் இளைஞர்களிடம் முன்பு போல் கிரிக்கெட் ஆர்வம் இல்லை. அவர்கள் தடகள வீரர்கள் ஆகவோ இல்லை கூடைப்பந்து வீரர்களாகவோ உருவாகத்தான் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். அதில் கிரிக்கெட்டை விட அதிக பணம் கிடைக்கிறது. இதன் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் மெல்ல சரிந்து இந்த நிலைக்கு வந்திருக்கிறது.

- Advertisement -

மேலும் உலகெங்கும் நடக்கும் டி20 லீக்குகளில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுக்கு பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. அவர்கள் ஒரே அணியாகத்தான் சரியாக விளையாட மாட்டார்கள், ஆனால் தனித்தனி வீரர்களாக உலகெங்கும் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். எனவே அவர்களுடைய பொருளாதார தேவைக்காக வெளிநாடுகளில் நடைபெறும் டி20 லீக்குகளில் விளையாட விரும்புகிறார்கள்.

இந்த நிலையில்தான் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான சம்பள மத்திய ஒப்பந்தத்தை அறிவித்தது. ஆனால் அதிரடியாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர வீரர்கள் நிக்கோலஸ் பூரன், ஜேசன் ஹோல்டர் மற்றும் கைய்ல் மேயர்ஸ் மூவரும் மத்திய சம்பள ஒப்பந்தத்தை நிராகரித்திருக்கிறார்கள்.

இந்த ஒப்பந்தத்தை ஏற்றால் அவர்கள் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும், வெஸ்ட் இண்டீஸ் நிர்வாகம் அழைக்கும் பொழுது விளையாட வேண்டும். வெளிநாடுகளில் நடக்கும் டி20 லீக்குகளில் விளையாடவே இதைத் தவிர்த்து இருக்கிறார்கள்.

அதே சமயத்தில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் இவர்கள் மூவரும் அடுத்த வருடம் நடக்க இருக்கும் டி20 உலகக்கோப்பை வரையில், வெஸ்ட் இண்டீஸ் விளையாடும் சர்வதேச டி20 போட்டிகளில் முழுமையாக விளையாட உத்தரவாதம் கூறியிருப்பதாக தெரிவித்திருக்கிறது. எனவே இவர்கள் அடுத்த வருடம் டி20 உலகக்கோப்பையில் சொந்த நாட்டில் விளையாடுவார்கள்.

மத்திய சம்பள ஒப்பந்தத்தை பெற்ற வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் விபரம் :

அலிக் அதானாஸ், கிரெய்க் பிராத்வைட், கீசி கார்டி, டேஜெனரைன் சந்தர்பால், ஜோசுவா டா சில்வா, ஷாய் ஹோப், அகேல் ஹொசைன், அல்ஸாரி ஜோசப், பிராண்டன் கிங், குடகேஷ் மோட்டி, ரோவ்மன் பவல், கெமர் ரோச், ஜெய்டன் ஷெஃபர் மற்றும் ரோமரியோ சீல்ஸ்.

- Advertisement -