வின்னிங் சிக்ஸர் அடித்தும் வருத்தப்பட்டது ஏன்?.. என் பிளான் வேற.. கேஎல்.ராகுல் கூறிய சுவாரசியமான விஷயம்,

0
71680
Rahul

இந்த வருடம் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் பாதியில் காயத்தில் லக்னோ அணியின் கேப்டனாக பொறுப்பேற்று இருந்த கேஎல்.ராகுல் வெளியேறினார். அதற்குப் பின்னால் அவரது காயத்திற்கு அறுவை சிகிச்சையும் நடந்தது.

இந்த நேரத்தில் அவர் உலகக் கோப்பைக்கு வெகு அருகில் மறுவாழ்வில் இருந்தார். ஒருபுறம் உலகக் கோப்பைக்கான இந்திய அணியை அறிவிப்பதிலும், அவர் காயம் குணமடைவதிலும் பெரிய ரேஸ் நடந்து கொண்டு இருந்தது.

- Advertisement -

இதற்கு நடுவே இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழு அவரை ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை இந்திய அணியில் தேர்வு செய்தது. அந்த நேரத்தில் அவர் ஆசியக் கோப்பை அணியிலும் இடம் பெற்று, ஆனால் இந்திய அணியுடன் காயம் முழுவதும் குணமடையாத காரணத்தினால் செல்லாமல் இருந்தது சர்ச்சையாக மாறியது.

இந்த நிலையில் ஆசியக் கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக கடைசி நேரத்தில் இந்திய விளையாடும் அணிக்குள் வந்து, அபாரமாக ஒரு சதம் அடித்து அனைவரது பார்வையையும் தன் பக்கம் திருப்பினார். மேலும் இந்தியாவில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும் அவர் ஆட்டம் சிறப்பாக இருந்தது.

இன்று எல்லாவற்றிற்கும் உச்சமாக இந்திய அணி உலகக்கோப்பையின் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான துவக்க ஆட்டத்தில் 200 ரன்களை துரத்திய பொழுது, முதல் இரண்டு ரன்கள் மூன்று விக்கெட்டுகளை இழந்து நெருக்கடியில் சிக்கியது.

- Advertisement -

இந்த நேரத்தில் விராட் கோலி உடன் இணைந்து 165 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்ததோடு, இறுதிவரை களத்தில் நின்று 115 பந்துகளில் 97 ரன்கள் எடுத்து இந்திய அணிக்கு வெற்றியையும் தேடித் தந்து அசத்தினார். சதம் அடிப்பதற்கு இருந்த ஒரு சிறிய வாய்ப்பு கடைசியில் சிக்ஸர் அடித்த காரணத்தினால் நழுவியது. பவுண்டரி அடித்து சிக்ஸர் அடித்திருந்தால், அவர் சதத்தை எட்டி இருக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. சிக்ஸர் அடித்தும் கேஎல் ராகுல் அதற்கு வருத்தப்பட வேண்டியதாக இருந்தது.

போட்டி முடிவுக்குப் பின் நகைச்சுவையாக இதுகுறித்து கூறிய அவர் ” நான் அந்த பந்தை நன்றாக அடித்தேன். ஆனால் பவுண்டரி செல்லும் என்று நினைத்தேன். ஆனால் சிக்ஸர் ஆக மாறியது. பவுண்டரி சென்று இருந்தால், அடுத்து சிக்ஸர் அடித்து சதத்தை எட்டி இருக்கலாம். ஆனால் அடுத்த முறை இது நடக்கும் என்று நம்புகிறேன்!” என்று கூறியிருக்கிறார்!