“மும்பை இந்தியன்ஸ் கேப்டன் பொறுப்பில் ரோகித் சர்மா நீக்கப்பட்டது ஏன்” – முதல் முறையாக காரணம் கூறிய மார்க் பவுச்சர்

0
313
Rohit

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்று 5 கோப்பைகளை வென்று கொடுத்த ரோஹித் சர்மாவை, இந்த வருடத்துக்கான மும்பை இந்தியன்ஸ் கேப்டன் பொறுப்பில் இருந்து, அந்த அணி நிர்வாகம் அதிரடியாக நீக்கியது. மேலும் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை கொண்டு வந்தது.

இதன் காரணமாக மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களே சமூக வலைதளத்தில் மிகவும் கொந்தளிப்பாக காணப்பட்டார்கள். மேலும் மும்பை இந்தியன்ஸ் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் இருந்து பலர் வெளியேறினார்கள்.

- Advertisement -

இது தொடர்பாக இன்னும் எந்தவிதமான பதில்களும் வெளிவராத நிலையில் ரோஹித் சர்மாவும் எதுவும் பேசவில்லை. இந்த சூழ்நிலையில் அணியின் தலைமை பயிற்சியாளர் தென் ஆப்பிரிக்காவின் மார்க் பவுச்சர், ரோகித் சர்மா ஏன் கேப்டன் பொறுப்பில் இருந்து நகர்த்தப்பட்டார் என்று கூறி இருக்கிறார்.

மேலும் இந்த முடிவுகள் குறித்து இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு சரியாக புரியவில்லை என்றும், இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இந்த விஷயத்தில் தேவையில்லாமல் உணர்ச்சிவசப்படுகிறார்கள் என்றும் அவர் பேசியிருக்கிறார்.

இதுகுறித்து மார்க் பவுச்சர் கூறும்பொழுது “இது முழுக்க முழுக்க கிரிக்கெட்டுக்கான முடிவு. ஹர்திக்கை மீண்டும் ஒரு வீரராக அணிக்குள் கொண்டுவரும் காலகட்டத்தை நாங்கள் பார்த்தோம். என்னைப் பொறுத்தவரை இது ஒரு மாறுதல் காலகட்டம். இந்தியாவில் நிறைய பேருக்கு புரியாமல் உணர்ச்சிவசப்படுகிறார்கள்.

- Advertisement -

உணர்வுகளை இதிலிருந்து நீக்கி விடுங்கள். இது கிரிக்கெட்டில் எடுக்கப்பட்ட ஒரு முடிவு. இதன் காரணமாக கேப்டன்சி அழுத்தம் இல்லாமல் ரோஹித் சர்மா சென்று நிறைய ரன்கள் அடிக்கட்டும்.

ரோகித் சர்மா ஒரு நல்ல வீரர். அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி கோப்பைகளை வென்று கொடுத்திருக்கிறார். அத்தோடு இந்திய அணியையும் வழி நடத்துகிறார். அவர் எப்பொழுதும் பிசியாக இருந்து வருகிறார். ஐபிஎல் தொடரில் கடந்த இரண்டு சீசன்களாக அவரால் நல்ல முறையில் செயல்பட முடியவில்லை. ஆனால் கேப்டனாக நல்ல முறையில் செயல்பட்டார்.

அவர் மீண்டும் ஒரு வீரராக அணிக்குள் வந்து, சிரித்த முகத்துடன் விளையாடி நிறைய ரன்கள் எடுக்கட்டும். மேலும் அவர் தனது குடும்பத்துடனும் நேரம் செலவிடட்டும்.

இதையும் படிங்க : “இங்கிலாந்து அணிக்கு இந்த விஷயம் நல்லா தெரியும்.. நிச்சயம் ஜெயிப்பாங்க” – மைக்கேல் ஆதர்டன் பேச்சு

இதேபோல் ஹர்திக் பாண்டியாவும் சிறந்த வீரர். அவர் வேறு ஒரு அணிக்குச் சென்று முதல் சீசனிலேயே கேப்டனாக கோப்பை வென்றார். இரண்டாவது ஆண்டில் இரண்டாவது இடத்தை பிடித்தார். எனவே கேப்டனுக்கான சில நல்ல அடிப்படை விஷயங்கள் அவரிடம் இருக்கின்றன” என்று கூறி இருக்கிறார்.