“கில் 99% ஃபிட் என்று ரோகித் ஏன் சொன்னார்?.. அதுக்கு பின்னாடி இருக்கும் காரணம் இதுதான்!” – இந்திய முன்னாள் வீரர் விளக்கம்!

0
581
Rohit

இந்தியா பாகிஸ்தான் மோதலுக்கு இந்திய அணி தரப்பில் தயார் நிலையில் இருக்கிறது. மேலும் இந்த முறை விரும்பிய அணியை அமைக்கக்கூடிய வகையில் அணியில் அனைவரும் உடல் தகுதியில் இருப்பதாக தெரிகிறது!

மேலும் அகமதாபாத்தில் வழக்கத்திற்கு மாறாக இந்த முறை பந்து திரும்பும் வகையிலான ஆடுகளம் அமைக்கப்படலாம் என்று பலரும் கருதுகிறார்கள். இதனால் ரவிச்சந்திரன் அஸ்வின் உள்ளே வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது.

- Advertisement -

நேற்று பத்திரிக்கையாளர் சந்திப்பை எதிர்கொண்ட இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கில் பற்றி கூறும் பொழுது அவர் 99 சதவீதம் உடல் தகுதியோடு இருக்கிறார் என்பதாக கூறியிருந்தார். ஏன் 100 சதவீதம் என்று கூறவில்லை அவர் விளையாட மாட்டாரா? என்று பலரும் சந்தேகம் கேட்டு வருகிறார்கள்.

இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது “சுப்மன் கில் இருக்கிறார். அவர் நிறைய பயிற்சி செய்து பேட்டிங் செய்ததால் விளையாடுவார் என்று நம்பப்படுகிறது. அவர் 99% ஃபிட் என்று ரோஹித் சர்மா சொன்னது ஒரு சோப்பு விளம்பரத்தில் 99.9 சதவீத கிருமிகள் அழிந்து விடும் என்று சொல்வது போல் இருக்கிறது. அந்த ஒரு சதவீத கிருமியை யாராலும் கொல்ல முடியாது.

உண்மையாகவே நான் விளையாடும் பொழுது 100% உடல் தகுதியோடு எந்த வீரரையும் பார்த்தது கிடையாது. எல்லா வீரருக்கும் உடம்பில் சிறுசில பிரச்சனைகள் இருக்கவே செய்யும். இதனை சமாளித்துக் கொண்டுதான் எல்லா வீரர்களும் விளையாடுவார்கள்.

- Advertisement -

மேலும் கில்லுக்கு வந்தது டெங்கு காய்ச்சல். இதன் பாதிப்பிலிருந்து மீண்டு வருவதற்கான நாட்கள் அதிகம் எடுக்கும். தற்பொழுது அவர் மீண்டு வந்து நிற்கிறார் என்றால், மருத்துவக் குழு அவர் விளையாடலாம் என்று கூறாமல் அவர் இந்த இடத்திற்கு வந்திருக்க மாட்டார்.

எங்களிடம் ஒரு நல்ல அணி இருப்பதால் கில் இல்லாமல் கூட எங்களால் சமாளிக்க முடியும். இஷான் கிஷான் கில் போல கிடையாது என்றாலும் கூட, அவர் சிறப்பான அதிரடியான வீரர் என்பதை மறக்க வேண்டாம். அவராலும் விளையாட முடியும். கில் இல்லாவிட்டால் அவர்தான் விளையாட போகிறார்.

அணியில் எட்டாவது இடம் பற்றிய ஒரு கேள்வி இருக்கிறது, இந்திய சூழ்நிலையில் பந்து நகரும்போது நிச்சயம் முகமது சமியை விளையாட வைக்க வேண்டும். இல்லையென்றால் சர்துல். ஆனால் அஸ்வின் விளையாட அதிக வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் அகமதாபாத்தில் பந்து சுழலும் என்று எதிர்பார்க்கப்படுகிறது!” என்று கூறியிருக்கிறார்!