“உலகக் கோப்பை அணியில் பேக்கப் ஓபனர் ஏன் இல்லை?” – சம்பந்தமில்லாமல் பதில் சொன்ன பாகிஸ்தான் தேர்வுக்குழு தலைவர்!

0
81
Pakistan

சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து முடிந்த 15வது ஆசிய கோப்பை தொடரில், பாகிஸ்தான் அணியின் டி20 போட்டிகளில் வெற்றிகரமான துவக்க ஜோடியாக விளங்கி வந்த பாபர் மற்றும் ரிஸ்வான் ஜோடி சொந்த நாட்டு ரசிகர்கள் மற்றும் சொந்த நாட்டு முன்னாள் வீரர்கள் இடமே விமர்சனத்திற்கு உள்ளானது.

இந்த ஆசியக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியின் ரன் மெஷினாக சமீபக் காலத்தில் உருவெடுத்த கேப்டன் பாபர் ஆசம் மொத்தம் 6 ஆட்டங்களில் 68 ரன்களை மட்டுமே எடுத்தார். அதே வேளையில் இன்னொரு துவக்க ஆட்டக்காரரான முகமது ரிஸ்வான் இந்தத் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரராக இருந்தாலும், அவருக்கு ஸ்டிரைக் ரேட் மிக மோசமாக இருந்தது.

- Advertisement -

இறுதிப் போட்டியில் இலங்கை அணியுடனான தோல்விக்கு முகமது ரிஸ்வானின் மெதுவான பேட்டிங் தான் முக்கியக் காரணம் என்று பாகிஸ்தான் அணியின் லெஜெண்ட் வீரரான வாசிம் அக்ரம் வரை குற்றம் சாட்டி இருந்தார். 170 ரன்களை துரத்தும் போது, 15-வது ஓவரில் ஒரு தொடக்க ஆட்டக்காரர் 106 ஸ்டிரைக் ரேட்டில் இருப்பது எந்தவிதத்திலும் அணியின் வெற்றிக்கு உதவாது என்று வாசிம் அக்ரம் அப்போது கடுமையாகவே விமர்சனம் செய்திருந்தார்.

இந்த நிலையில் நேற்று, அக்டோபர் நவம்பர் மாதத்தில் ஆஸ்திரேலியாவில் நடக்க இருக்கும் டி20 போட்டிக்கான 15 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டது. அணியில் பெரிதாக குறை சொல்ல முடியாத அளவிற்கு எல்லாமே சரியாக இருந்த மாதிரிதான் இருந்தது. ஆனால் தொடரின் இடையில் பாபர் இல்லை ரிஸ்வான் காயமடைந்தால் அவர்களுக்கு பதிலாக அணியில் ஒரு மாற்று தொடக்க ஆட்டக்காரர் இல்லை. இதுதொடர்பாக பத்திரிக்கையாளர்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கான தேர்வுக்குழு தலைவர் முகமது வாசிம் அவரிடம் கேள்வியை முன் வைத்தார்கள்.

இதற்கு அவரது பதில் முற்றிலும் கேள்விக்கு தொடர்பற்றதாக இருந்தது. ஏனென்றால் எந்த ஒரு அணிக்கும் மாற்று துவக்க ஆட்டக்காரர் என்பது அவசியம். இப்படி ஒரு கேள்வி முன்வைக்கப்பட்டால், யாரை மாற்று துவக்க வீரராகக் கருதுகிறோம் என்று சொல்லவேண்டும். இப்படி இரண்டும் இல்லாமல் அவர் வேறு ஒரு பதிலை கூறியிருந்தார்.

- Advertisement -

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கான தேர்வுக்குழு தலைவர் முகமது வாசிம் கூறியதாவது ” இருவரும் எங்களுக்கு போதுமான வெற்றியைப் பெற்று தந்து இருக்கிறார்கள். ஆனால் நீங்கள் உலக கிரிக்கெட்டில் சிறந்த துவக்க ஜோடியை பிரிப்பது பற்றி பேசிக் கொண்டிருக்கிறீர்கள். அவர்கள் எங்களின் பலமான புள்ளிகள் மற்றும் அவர்கள் நிலைத்தன்மை உடன் ரன்கள் அடித்தது எண்கள் காட்டுகிறது. அவர்களின் ஸ்டிரைக் ரேட்டை நான் புரிந்து கொள்கிறேன். நீங்கள் அதில் சீக்கிரத்தில் முன்னேற்றத்தை பார்ப்பீர்கள்” என்று கூறினார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” கடந்த 13 டி20 போட்டிகளில் ஒன்பது போட்டிகளை வென்றோம். சில மோசமான செயல்பாடுகளை வைத்து மொத்தமாக நிராகரிப்பது தவறு. எனக்கு இவர்களின் மேல் நம்பிக்கை இருக்கிறது. இவர்களது அணியில் மேலிருந்து கீழ் வரை இருக்கக்கூடிய எல்லா வீரர்களும் அணியை வெற்றி பெற வைத்திருக்கிறார்கள். நீங்கள் யார் பெயரை வேண்டுமானாலும் கூறுங்கள், அவர்கள் கடந்த காலத்தில் அணிக்காக சிறப்பாச் க செயல்பட்டு இருக்கிறார்கள். உலகக் கோப்பை நடக்கவுள்ள ஆஸ்திரேலிய சூழ்நிலைகளை மனதில் வைத்து நாங்கள் வீரர்களை தேர்வு செய்துள்ளோம். இந்த முழு அணியும் எங்களின் பலம். இந்த அணி எங்களுக்கு நல்ல முடிவுகளை பெற்றுத்தரும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று தெரிவித்திருக்கிறார்.