“எனக்கு பதிலாக உத்தப்பாவை அணியில் சேர்க்க என்னிடம் அனுமதி கேட்ட தோனி” – சுரேஷ் ரெய்னா பகிர்ந்த வெளிவராத தகவல்!

0
3391

சிஎஸ்கே ரசிகர்களால் சின்ன தல என்று அன்புடன் அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த அதே நாளில் தன்னுடைய ஓய்வையும் அறிவித்தவர் .

கடந்த வருடம் அனைத்து வடிவ கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு அறிவித்துவிட்டு தற்போது உலகெங்கிலும் நடைபெறும் கிரிக்கெட் லீக் போட்டிகளில் விளையாடி வருகிறார் . ஐபிஎல் தொடரில் வர்ணனையாளராகவும் பணியாற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது .

- Advertisement -

சிஎஸ்கே அணிக்கு மட்டுமல்லாது இந்திய அணிக்கும் மிடில் ஆர்டரில் ஒரு சிறந்த வீரராக விளங்கியவர் . 2011 உலகக்கோப்பை மற்றும் 2013 சாம்பியன்ஸ் டிராபி வெற்றிகளில் சுரேஷ் ரெய்னாவின் பேட்டிங் மற்றும் பில்டிங் முக்கிய பங்கு வைத்தது .

சமீபத்தில் டிவி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த சுரேஷ் ரெய்னா 2021 ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடரின் போது தனக்கு பதிலாக ராபின் உத்தப்பாவை அணியில் தேர்ந்தெடுத்தது ஏன் என விளக்கம் அளித்திருக்கிறார் . 2021 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் போது 12 போட்டிகளில் ஆடிய சுரேஷ் ரெய்னா 160 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார் . அந்தத் தொடரில் இவரது சராசரி 17.77. மேலும் அந்தத் தொடரில் ஆடிய ராபின் உத்தப்பா 12 போட்டிகளில் 230 ரன்கள் எடுத்திருந்தார். சிஎஸ்கே அணிக்காக குவாலிஃபயர் மற்றும் இறுதிப் போட்டியில் அதிரடியாக ஆடி அரை சதங்கள் எடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது .

இதுகுறித்து பேசி இருக்கும் சுரேஷ் ரெய்னா ” எம்எஸ் தோனி என்னிடம் எனக்கு பதிலாக ராபின் உத்தப்பாவை எடுக்க அனுமதி கேட்டார். அதற்கு பதில் அளித்த நான் கடந்த சீசனில் அவர் கடுமையாக உழைத்து அணியின் வெற்றிக்காக போராடினார் . அதனால் அவரை தேர்ந்தெடுப்பதே சரியாக இருக்கும் என கூறினேன்” என்று தெரிவித்தார் .

- Advertisement -

மேலும் எம் எஸ் தோனி உடனான நட்பு குறித்து பேசிய அவர்” இந்திய அணியில் விளையாடுவதற்கு முன்பாக எம் எஸ் தோனி உடன் நான் விளையாடி இருக்கிறேன். அவரது தலைமையின் கீழ் விளையாடியது மறக்க முடியாத அனுபவம் . எங்கள் இருவருக்குள்ளும் எப்போதுமே சிறந்த நட்பு இருக்கிறது . அவர் ஒரு மிகச்சிறந்த தலைவர் . நாங்கள் இணைந்து உலகக்கோப்பை சாம்பியன்ஸ் டிராபி மற்றும் ஐபிஎல் போட்டிகளை வெற்றி பெற்றது என்றுமே மறக்க முடியாத அனுபவம் என தெரிவித்தார் .