“ரோகித்துக்கு எதுக்கு ஆட்டநாயகன் விருது? பும்ராவுக்குதான் தரனும்!” – இந்திய முன்னாள் வீரர் அதிரடியான கருத்து!

0
452
Bumrah

இந்திய அணி நேற்று டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது!

இந்த டெல்லி மைதானம் மிகவும் சிறியது. இதன் காரணமாக ஆடுகளம் எப்பொழுதும் பேட்டிங் செய்வதற்கு கொஞ்சம் சிரமமாக இருக்கும்படி, மெதுவாகவும் பந்து திரும்பும் படியும் அமைக்கப்பட்டிருக்கும்.

- Advertisement -

இந்த நிலையில் உலகக் கோப்பை தொடருக்காக மாற்றி அமைக்கப்பட்ட டெல்லி ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு மிகவும் சாதகமான ஒன்றாக மாற்றப்பட்டு இருக்கிறது. டெல்லியில் குறிப்பாக சிறிய அணிகளுக்கு எதிராக பெரிய அணிகள் மோதும் போட்டிகள் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த உலகக் கோப்பை தொடரில் டெல்லி மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இலங்கை தென் ஆப்பிரிக்க அணிகள் மோதினர். இதில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 428 ரன்கள் குவித்து, ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் அதிகபட்ச ரன்கள் குவித்த அணியாக உலகச் சாதனை படைத்தது.

இப்படியான ஒரு மைதானத்தில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா பத்து ஓவர்கள் பந்து ஓவர்கள் பந்து வீசி 39 ரன்கள் மட்டும் விட்டுத் தந்து நான்கு முக்கிய விக்கெட்டுகளையும் கைப்பற்றி ஆப்கானிஸ்தானின் சரிவுக்குப் பெரிய காரணமாக அமைந்தார். இல்லையென்றால் அந்த அணி இன்னும் ஒரு 30 ரன்களுக்கு மேலாக சேர்த்து எடுத்திருக்கும்.

- Advertisement -

இந்த நிலையில் பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளத்தில் 131 ரன்கள் குவித்த ரோகித் சர்மாவுக்கு ஆட்டநாயகன் விருது நேற்று தரப்பட்டது. பந்து வீச பெரும் சிரமமான மைதானத்தில் இப்படி ஒரு பந்துவீச்சை வெளிப்படுத்திய பும்ராவுக்கு ஆட்டநாயகன் விருது தந்திருக்க வேண்டும் என்று இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “நான் பும்ராவுக்கு ஆட்டநாயகன் விருது தந்திருக்க வேண்டும் என்று கூறுவேன். காரணம் எளிமையானதுதான், அந்த ஆடுகளம் தார் ரோடு போல இருந்தது. அங்கு எந்த பந்துவீச்சாளர்களுமே பந்து வீச விருப்பப்பட மாட்டார்கள்.

பும்ரா நேற்று புதிய பந்தில் விக்கெட் எடுத்தார் மேலும் கடைசிக்கட்டத்தில் வந்து வைக்கட்டுகள் கைப்பற்றினார். ஆப்கானிஸ்தான அணியில் சாகிதி மற்றும் உமர்சாய் இருவர் யாராக இருந்தாலும் அவர்கள் நன்றாக பேட்டிங் செய்தார்கள். துவக்க ஆட்டக்காரர்கள் மட்டும் கொஞ்சம் குறைவாக இருந்தார்கள். ஆனால் பும்ரா சரியான இடைவெளியில் விக்கெட் கைப்பற்றி நெருக்கடி கொடுத்தார்!” என்று கூறியிருக்கிறார்!