2வது டெஸ்டில் முகமது சிராஜ் ஏன் விளையாடவில்லை?.. உண்மை காரணத்தை வெளியிட்ட பிசிசிஐ

0
92
Siraj

இன்று இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதிக் கொள்ளும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரண்டாவது போட்டி சற்றுமுன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வது என முடிவு செய்தது. ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு சாதகமான சூழ்நிலையில் காணப்படுகிறது.

- Advertisement -

இங்கிலாந்து அணியின் தரப்பில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன. லீச் இடத்தில் அறிமுகமாக சோயப் பஷீர் வருகிறார். மார்க் வுட் இடத்தில் ஆண்டர்சன் இடம் பெற்று இருக்கிறார்.

கடந்த முதல் போட்டியை போலவே இந்த போட்டியிலும் இங்கிலாந்து அணியின் தரப்பில் ஒரே ஒரு வேகப்பந்துவீச்சாளர் மட்டுமே இடம்பெற்று இருக்கிறார். ஆனால் இந்திய அணி இரண்டு வேகப்பந்துவீச்சாளர்களுடன் களம் இறங்கி இருக்கிறது.

இதில் ஒரு மாற்றமாக முகமது சிராஜ் இடத்தில் முகேஷ் குமார் இடம்பெற்று இருக்கிறார். பும்ரா முன்னணி வேகப்பந்துவீச்சாளராக அணியில் தொடர்கிறார்.

- Advertisement -

சிராஜ் நீக்கப்பட்டு அவருடைய இடம் சர்பராஸ்கான் இல்லை வாஷிங்டன் சுந்தர் இருவரில் ஒருவருக்கு கொடுக்கப்படலாம் என்று பேசி வந்த நிலையில், சிராஜ் இடத்தை மற்றுமொரு வேகப்பந்துவீச்சாளர் முகேஷ் குமார் இடம் கொடுத்திருப்பது ஆச்சரியத்தை உண்டாக்கி இருக்கிறது.

தற்பொழுது சிராஜ் ஏன் விளையாடவில்லை என்பதற்கான காரணத்தை பிசிசிஐ தெரிவித்து இருக்கிறது. அதில் முகமது சிராஜ் நீக்கப்படவில்லை ஓய்வு கொடுக்கப்பட்டு இருக்கிறார் என்று கூறப்பட்டிருக்கிறது.

பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் “தொடரின் நீளம் காரணமாகவும், தொடர்ச்சியாக நீண்ட காலமாக ஓய்வில்லாமல் கிரிக்கெட் விளையாடி வருவதை கருத்தில் கொண்டும் சிராஜ்க்கு ஓய்வு கொடுக்கப்பட்டிருக்கிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சிராஜ் பெயரை தேர்வில் சேர்க்கவில்லை. ராஜ்கோட்டில் நடக்கும் மூன்றாவது போட்டிக்கு வருகிறார். தற்பொழுது இரண்டாவது போட்டிக்கு அவர் இடத்தில் ஆவேஷ் கான் அணிக்குள் வந்திருக்கிறார்” என்று கூறப்பட்டு இருக்கிறது.

இதையும் படிங்க : “பிட்ச் அதோட வேலையை செய்யும்.. நாமதான் ஒழுங்கா விளையாடனும்.. எதிர்பார்க்காத மாற்றம்” – ரோகித் சர்மா பேச்சு

முகமது சிராஜ் இடத்தில் இடம் பெற்றுள்ள முகேஷ் குமார் முதல் முறையாக இந்திய மண்ணில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை விளையாட இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.