“பிட்ச் அதோட வேலையை செய்யும்.. நாமதான் ஒழுங்கா விளையாடனும்.. எதிர்பார்க்காத மாற்றம்” – ரோகித் சர்மா பேச்சு

0
95
Rohit

இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதிக் கொள்ளும் இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மைதானத்தில் இன்று துவங்குகிறது.

இந்தப் போட்டிக்கான டாசில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா வெற்றி பெற்று முதலில் தங்கள் அணி பேட்டிங் செய்யும் என அறிவித்திருக்கிறார்.

- Advertisement -

அதே சமயத்தில் யாரும் எதிர்பார்க்காத மாற்றம் ஒன்று இந்திய அணியில் நடந்திருக்கிறது. சிராஜ் இடத்தில் முகேஷ் குமார் சேர்க்கப்பட்டிருக்கிறார். ஜடேஜா இடத்தில் குல்தீப் யாதவ் வந்திருக்கிறார். கே.எல்.ராகுலின் இடம் ரஜத் பட்டிதாருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.

இங்கிலாந்து அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது. லீசுக்கு பதிலாக சோயப் பஷீர் அறிமுகம் ஆகிறார். அதேபோல் மார்க் வுட் இடத்தில் அனுபவ ஆண்டர்சன் மீண்டும் வருகிறார்.

இங்கிலாந்து அணி போல இந்திய அணியும் ஒரு வேகப்பந்துவீச்சாளரை மட்டும் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனால் இந்திய அணி இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களை எடுத்துச் செல்கிறது. இதன் காரணமாக சர்ப்ராஸ் கானுக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

- Advertisement -

டாஸ் வென்ற கேப்டன் ரோஹித் சர்மா பேசும்பொழுது ” இது நல்ல ஆடுகளமாக தெரிகிறது. எனவே நாங்கள் முதலில் பேட்டிங் செய்கிறோம். ஆடுகளம் அதனுடைய வேலையைச் செய்யும். நாம்தான் நன்றாக கிரிக்கெட் விளையாட வேண்டும். ஹைதராபாத்தில் நடந்தது வரலாறு. நாங்கள் அங்கு முதல் இன்னிங்சில் நன்றாக விளையாடியதாக நினைத்தோம். ஆனால் பின்பு போப் வந்து எல்லாவற்றையும் மாற்றினார்.

காயம் ஆட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கிறது. இதன் காரணமாக சில தோழர்கள் வெளியில் இருக்க வேண்டியதாக அமைந்துவிட்டது. கட்டாயமான மாற்றமாக ஜடேஜா மற்றும் கே எல் ராகுல் ஆகியோர் வெளியே சென்று இருக்கிறார்கள். குல்தீப், முகேஷ் குமார் மற்றும் ரஜத் பட்டிதார் அறிமுகம் செய்யப்படுகிறார்” என்று கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க : “21 வயசுலயே பண்ணிட்டேன்.. ரன்தான் எப்பவும் முக்கியம்” – ஸ்டோக்ஸ்க்கு குக் பதிலடி

இங்கிலாந்து அணியை பொறுத்தவரையில் அவர்கள் மீண்டும் தங்களுடைய சிறப்பான தொடரின் தொடக்கத்தை தொடரவே விரும்புகிறார்கள். புதிய வாரத்தில் பழைய வெற்றி தந்த நம்பிக்கை உடன் தொடர்வோம் என இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் கூறியிருக்கிறார்.