“ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக பிரசித் கிருஷ்ணாவை ஏன் தேர்வு செய்தோம்!” – ராகுல் டிராவிட் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி!

0
2414
Dravid

நடப்பு 13வது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி இதுவரை தோல்வியை சந்திக்காமல் 7 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று இருக்கிறது.

இந்த நிலையில் நாளை எட்டாவது போட்டியில் இந்திய அணி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் புள்ளி பட்டியலில் தனக்கு அடுத்து இருக்கும் தென் ஆப்பிரிக்க அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது.

- Advertisement -

மூன்று போட்டிகளுக்கு முன்பாக பங்களாதேஷ் அணிக்கு எதிராக ஹர்திக் பாண்டியா காயம் அடைந்த காரணத்தினால், இந்திய அணி தொடர்ச்சியாக 5 பந்துவீச்சாளர்களுடன் மட்டுமே விளையாடி வருகிறது. ஆனால் பந்துவீச்சு மிகவும் தாக்கம் தரக்கூடியதாகவும் மாறியிருக்கிறது.

இதே போல்தான் தென் ஆப்பிரிக்க அணியும் ஐந்து பந்துவீச்சாளர்களை மட்டுமே கொண்டு விளையாடி வருகிறது. அவர்களும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சிறந்த தாக்கத்தை உலக கோப்பையில் உருவாக்கி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று காலை ஹர்திக் பாண்டியா காயம் சரியாகாத காரணத்தினால் உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகுகிறார் என்கின்ற அதிர்ச்சியான அறிவிப்பு வெளியில் வந்தது.

- Advertisement -

மேலும் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இடத்திற்கு வலதுகை வேகப்பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா அறிவிக்கப்பட்டது சர்ச்சையாக சமூக வலைதளத்தில் சென்று கொண்டிருக்கிறது. ஒரு ஆல்ரவுண்டருக்கு இன்னொரு ஆல் ரவுண்டர்தான் வரவேண்டும் என்கின்ற போக்கில் இந்திய ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.

தற்பொழுது இதற்கு பதில் அளித்து பேசி இருக்கின்ற இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இது குறித்து விளக்கமாகவே தெளிவுபடுத்தி இருக்கிறார்.

ராகுல் டிராவிட் இது குறித்து கூறும் பொழுது ” ஹர்திக் பாண்டியா காயம் அடைந்த பிறகு நாங்கள் மூன்று வேகப்பந்துவீச்சாளர்களை வைத்து விளையாடினோம். எங்களிடம் சுழற் பந்துவீச்சாளருக்கும் ஆல்ரவுண்டருக்கும் மாற்று வீரர்கள் இருக்கிறார்கள். ஆனால் எங்களுக்கு ஒரு வேகப்பந்துவீச்சாளருக்கு மாற்று வீரர் தேவைப்படுகிறது. எனவே இதன் காரணமாக பிரசித் கிருஷ்ணா அணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்!” என்று கூறியிருக்கிறார்!