“அவரெல்லாம் ஏன் டீம்ல எடுத்தாங்க .?.. ஒண்ணுமே புரியல” – இந்திய வீரரின் தேர்வு குறித்து பியூஸ் சாவ்லா சர்ச்சை கருத்து.!

0
1043

வருகின்ற அக்டோபர் மாதம் ஐந்தாம் தேதி முதல் துவங்க இருக்கும் 13 வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்காக அதில் கலந்து கொள்ளும் அனைத்து நாடுகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. உலகக்கோப்பை துவங்குவதற்கு இன்னும் ஒரு மாதங்களுக்கும் குறைவான கால அளவே உள்ள நிலையில் உலகக் கோப்பையில் விளையாடும் வீரர்களை அறிவிக்க துவங்கி விட்டனர்.

தென்னாப்பிரிக்கா இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற அணிகள் உலக கோப்பையில் விளையாடும் 15 பேர் கொண்ட தங்கள் வீரர்களின் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. இந்த வருடம் நடைபெற இருக்கும் உலகக் கோப்பை இந்தியாவில் வைத்து நடைபெறுவதால் இந்திய கிரிக்கெட் அணியின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

- Advertisement -

15 வீரர்கள் கொண்ட இந்திய உலகக் கோப்பை அணி அறிவிக்கப்பட்டதிலிருந்து அதில் இருக்கும் வீரர்கள் தொடர்பான விமர்சனங்களும் விவாதங்களும் நடைபெற்று வருகிறது . மேலும் உலக கோப்பையில் எந்தெந்த 11 வீரர்கள் விளையாடுவார்கள் எனவும் கிரிக்கெட் வீரர்கள் தீவிரமாக ஆலோசித்து தங்களது யூகங்களை வெளியிட்டு வருகின்றனர் .

இந்நிலையில் 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை அணியில் இடம் பெற்ற இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான பியூஸ் சாவ்லா, ஸ்ரேயாஸ் அய்யர் குறித்து தனது கேள்வியை எழுப்பி இருக்கிறார். மேலும் உலகக் கோப்பை காண 15 பேர் கொண்ட அணியில் அவரை ஏன் தேர்வு செய்தார்கள் என்று தெரியவில்லை எனவும் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டு இருக்கிறார்.

இது தொடர்பாக பேசியிருக்கும் அவர் ” நாம் அனைவரும் இஷான் கிசான் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோரை பற்றி தான் பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால் ஸ்ரேயாஸ் ஐயரை இந்திய அணியில் ஏன் தேர்வு செய்தார்கள்.? கடந்த சில மாதங்களில் இந்தியா விளையாடி அனைத்து போட்டிகளிலும் இஸ்லாம் கிசான் மிக திறமையாக விளையாடி இருக்கிறார். அவரை ஆடும் லெவனில் இருந்து நீக்க முடியும் என்று நினைக்கின்றீர்களா? என கேள்வி எழுப்பி உள்ளார் .

- Advertisement -

மேலும் இது தொடர்பாக தொடர்ந்து பேசிய பியூஸ் சாவ்லா” கடினமான மேற்கிந்திய தீவு ஆடுகளங்களில் மூன்று அரை சதங்களை தொடர்ந்து எடுத்தார் . மேலும் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியில் இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டார் . கடந்த வருடம் பங்களாதேஷ் அணிக்கு எதிராக ஒரு நாள் போட்டியில் இரட்டை சதம் விலாசினார். இதுபோன்ற சிறப்பாக ஆடிக் கொண்டிருக்கும் ஒரு வீரர் நிச்சயமாக உலகக்கோப்பை ஆடும் உள்ளவனில் இடம்பெற வேண்டும் . அப்படி இருக்கும்போது அணி நிர்வாகம் ஏன் ஸ்ரேயாஸ் ஐயரை தேர்வு செய்து இருக்கிறது? என கேள்வி எழுப்பியிருக்கிறார்.

2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்கு பிறகு இந்திய அணிக்காக நான்காவது வீரராக களம் இறங்கி சிறப்பாக விளையாடி வருபவர் ஸ்ரேயாஸ் ஐயர் என்பது குறிப்பிடத்தக்கது . அவர் கடைசியாக இந்திய அணிக்காக விளையாடிய போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார் . காயம் காரணமாக அணியில் இருந்து வெளியேறிய அவர் அறுவை சிகிச்சைக்கு பின் உடற் தகுதியை மீண்டும் நிரூபித்து தற்போது அணிக்குள் மீண்டும் திரும்பி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.