துணைகேப்டன் பிளேயிங் லெவனில் இருக்கணும்னு அவசியமா? ரூல் எதுவும் இல்லை; கேஎல் ராகுலை வெளியே உக்கார வைங்க – நச்சுன்னு பேசிய கபில் தேவ்!

0
342

துணை கேப்டன் என்றால் சரியாக ஆடவில்லை என்றாலும் தொடர்ந்து அணியில் நீடிக்கலாமா? என்று சாடியுள்ளார் கபில் தேவ்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இடையே நடக்கவுள்ள பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் நாக்பூர் மைதானத்தில் துவங்க உள்ளது. இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் கடுமையாக பயிற்சிகளில் ஈடுபட்டு மைதானத்திற்கு ஏற்றவாறு தங்களது ஆட்டத்தை தயார் செய்து வருகின்றனர்.

- Advertisement -

இந்திய அணியில் மிக முக்கிய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் முதுகு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட முடியாமல் வெளியில் இருக்கிறார். ஆகையால் பிளேயிங் லெவனின் சூரியகுமார் யாதவ் இருப்பார் என்று கூறப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட இது உறுதியாகிவிட்டது என்றே கூறலாம்.

அணியின் துணை கேப்டனாக இருந்து வரும் கேஎல் ராகுல் இம்முறை துவக்க வீரராக களமிறங்க உள்ளார். இதனால் மிகச் சிறந்த பார்மில் இருக்கும் ஷுப்மன் கில் வெளியில் அமர்த்தப்பட இருக்கிறார் என்று தகவல்கள் வந்திருக்கிறது. இதுவும் உறுதியாகிவிட்டது.

இந்நிலையில் லிமிடெட் ஓவர் போட்டிகளில் மோசமான பார்மில் இருக்கும் கேஎல் ராகுல், கடைசியாக நடந்த வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் எதிர்பார்த்தவாறு செயல்படவில்லை என்பதால் பல்வேறு விமர்சனங்களை சந்தித்தார்.

- Advertisement -

சரியாக விளையாடாத கேஎல் ராகுலை எதற்காக அணியில் வைத்திருக்கிறீர்கள்? துணை கேப்டன் என்ற சலுகையினால் இன்னும் உள்ளே இருக்கிறாரா? என்று கடுமையாக சாடியுள்ளார் இந்திய அணியின் லெஜெண்ட் கபில் தேவ்.

“ஏன் கேஎல் ராகுல் வெளியில் அமர்த்தப்படவில்லை. துணை கேப்டன் என்பதால் அணியில் நீடிக்கலாம் என்ற விதிமுறைகள் எங்காவது உண்டா? அணியின் காம்பினேஷன் என்னவென்று முடிவு செய்து களமிறங்கவேண்டும். முன்பு துணைகேப்டன் இருக்கவேண்டும் என்ற விதிமுறை இருந்தது. இப்போது அதற்கான அவசியமில்லையே!.” என கேள்விகளை எழுப்பி சாடினார்.

“முன்பு ராகுல் டிராவிட் கீப்பிங் செய்து வந்ததால், சரியாக ஆடாதபோதும் அவர் அணியில் நீடித்தார். மேலும் துணைகேப்டனாகவும் இருந்தார். வெறுமனே துணைகேப்டன் என்பதற்காக அணியில் ஆடவைப்பது முறையற்றது. நன்றாக அவர்களது பொசிஷனில் ஆடும் வீரர்களை பயன்படுத்த வேண்டும்.” என்று கபில் தேவ் பேசினார்.