ஆப்கான் டி20 தொடரில் நீக்கம் ஏன்?.. ஸ்ரேயாஷ் ஐயர் வெளிப்படையான நேரடியான பேச்சு

0
189
Shreyas

தற்பொழுது இந்திய அணி உள்நாட்டில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக முதல் முறையாக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.

இந்த தொடரில் அதிரடியாக ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இசான் கிஷான் ஆகியோர் தேர்வுக்கான பரிசீலனையில் இல்லாமல் நீக்கப்பட்டு இருக்கிறார்கள். அதே நேரத்தில் விக்கெட் கீப்பிங் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். இந்த ஒரு வீரர் இவர்கள் இருவரது இடத்தையுமே நிரப்ப முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஆனால் இதற்கு முன்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் கடைசி இரண்டு போட்டிகளுக்கு ஸ்ரேயாஸ் ஐயர் அணிக்கு திரும்பிய பொழுது, அவருக்கு துணை கேப்டன் பதவி வழங்கப்பட்டது.

இதற்கு அடுத்து உடனடியாக தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் ஸ்ரேயாஸ் ஐயர் பெயர் சேர்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு விளையாடுவதற்கு வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை.

இப்படியான நிலையில்தான் அவருக்கு தற்பொழுது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. இதன் மூலம் வருகின்ற டி20 உலகக்கோப்பை தொடரிலும் அவரைத் தேர்வு செய்ய மாட்டார்கள் என்பது தெரிகிறது.

- Advertisement -

தற்பொழுது இது குறித்து பேசி உள்ள ஸ்ரேயாஸ் ஐயர் கூறும் பொழுது “நான் எப்பொழுதும் நிகழ்காலத்தைப் பார்க்கிறேன். என்னை எந்த போட்டியில் விளையாட சொன்னார்களோ அதை விளையாடி முடித்து விட்டேன். நான் வந்தேன் எனக்கு கொடுக்கப்பட்ட வேலையைச் செய்தேன். அதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

என்னுடைய கட்டுப்பாட்டில் இல்லாத ஒரு விஷயத்தில் என்னால் கவனம் செலுத்த முடியாது. இங்கு வந்து போட்டியை வெல்வதில்தான் கவனம் இருந்தது அதை செய்து முடித்தாயிற்று.

மேலும் இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விளையாடுகிறோம். எனவே எப்பொழுதும் ஒவ்வொரு போட்டியாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் தற்போது இரண்டு போட்டிக்கான இந்திய அணிதான் அறிவிக்கப்பட்டிருக்கிறது.எனவே முதலில் இந்த இரண்டு ஆட்டங்களில் சிறப்பாக செயல்பட வேண்டும். அதற்குப் பிறகு அடுத்து வரக்கூடிய விஷயங்களை யோசிக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.