“14 வயசுல உருவான சபதம்.. விராட் பாய்யை இப்படி பார்க்கிறது பெரிய மகிழ்ச்சி” – கில் பேச்சு

0
495
Gill

இந்திய அணி நிர்வாகம் கடந்த ஆண்டுகளில் செய்த மிகப்பெரிய தொலைநோக்கு திட்டமாக இருந்தது ஷிகர் தவான் இடத்துக்கு சுப்மன் கில்லை கொண்டு வந்தது.

2022 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு ஷிகர் தவான் தலைமை தாங்கினார். அந்த சமயத்தில் டி20 உலகக்கோப்பை தொடர இருந்த காரணத்தினால் முக்கிய வீரர்கள் டி20 வடிவத்தில் மட்டுமே கவனம் செலுத்தினார்கள்.

- Advertisement -

அப்பொழுது ஷிகர் தவான் உடன் இணைந்து துவக்க ஆட்டக்காரராக விளையாடுவதற்கு சுப்மன் கில்லை கொண்டு வந்தார்கள். அங்கிருந்து தான் காயத்திலிருந்து திரும்ப வந்த அவரது பயணம் வலிமையாக ஆரம்பித்தது.

அதற்குப் பிறகு ஜிம்பாப்வே தொடரில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். இதற்கு அடுத்து கடந்த ஆண்டில் அவருக்குமூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் சதங்கள் வந்தது. நான்காவதாக ஐபிஎல் தொடரிலும் மூன்று சதங்கள் அடித்தார்.

மேலும் கடந்த ஆண்டில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 1584 ரன்களை 63.36 ரன் ஆவரேஜில் அடித்து அசத்தி இருக்கிறார். உலகக் கோப்பை தொடருக்கு சற்று முன்பாக டெங்கு காய்ச்சல் பாதிப்பில் சிக்காமல் இருந்திருந்தால், அவருடைய இந்த ரன் இன்னும் அதிகமாகி ஒரு புதிய உலகச் சாதனையை படித்திருக்க முடியும்.

- Advertisement -

இந்த நிலையில் நாளை இந்திய அணி இங்கிலாந்து அணியை எதிர்த்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் உள்நாட்டில் விளையாட இருக்கிறது. இதற்கு முன்பாக நேற்று பிசிசிஐ விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த விழாவில் கடந்த ஆண்டுக்கான சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் என்கின்ற விருது சுப்மன் கில்லுக்கு வழங்கப்பட்டது. அவர் சிறுவயதில் கிரிக்கெட் விளையாடிய பொழுது இதே போல் விருது விழாவில் விருது வாங்க வந்து விராட் கோலியை சந்தித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து கில் பேசும் பொழுது “எனக்கு 14 வயதாக இருக்கும் பொழுது என்னுடைய முன்மாதிரி வீரர்களை நான் முதன்முறையாக சந்தித்ததில் இருந்து, எனக்கு இப்படி விருதுகளை வெல்லும் ஏக்கம் இருந்தது. விராட் பாய் இந்த ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் விருதை வென்றதை பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியானது. எல்லாவற்றையும் கொடுத்து சாதிக்க வேண்டும் என்கின்ற உந்துதல் இங்கிருந்துதான் வெளியில் வருகிறது” என்று கூறியிருக்கிறார்.