அடுத்த தேர்வுக்குழுத் தலைவர் யார்? முன்னாள் இந்திய வீரருக்கு வாய்ப்பு

0
378

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவர் பொறுப்பிலிருந்து சேத்தன் சர்மா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.செய்தியாளர் ஒருவர் மறைமுகமாக கேமிரா வைத்து பல்வேறு கேள்விகளைக் கேட்க அதற்கு சேத்தன் சர்மா மது போதையில் உளறினார்.இது இந்திய கிரிக்கெட் அணிக்கும் பிசிசிஐ நிர்வாகிகளுக்கும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

- Advertisement -

இந்த நிலையில் இது குறித்து விளக்கம் கேட்க பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா முடிவெடுத்திருந்தார். ஆனால் இனி இந்திய அணி வீரர்களின் முகத்தில் முழிக்க முடியாது என்பதற்காக சேத்தன் ஷர்மா தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இது குறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷாவுக்கு அவர் கடிதம் எழுதி இருக்கிறார்.

இதனை அடுத்து அடுத்த தேர்வு குழு தலைவர் யார் என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டி கொண்ட தொடருக்கு தான் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள இரண்டு டெஸ்ட் போட்டி மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று ஒரு நாள் போட்டி கொண்ட தொடருக்கான இந்திய அணி இன்னும் தேர்வு செய்யப்படவில்லை.

- Advertisement -

இந்த அணிகளை தேர்வு செய்ய புதிய தேர்வு குழு தலைவர் தேவை என்பதால் பிசிசிஐ தற்போது ஒரு திட்டம் போட்டுள்ளது. அதன்படி தற்காலிக தலைவர் ஒருவரை நியமித்து அதன் பிறகு புதிய தலைவரை தேர்ந்தெடுக்கலாம் என்பதுதான் அதன் திட்டம். அதன்படி தற்போது தேர்வு குழு உறுப்பினர்களாக இருக்கும் சிவ சுந்தர் தாஸ் தற்காலிக தலைவராக செயல்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிவசுந்தர் தாஸ் 180 உள்ளூர் டெஸ்ட் போட்டிகளிலும் 81 உள்ளூர் ஒருநாள் போட்டிகளிலும் ஒடிசா அணிக்காக விளையாடி இருக்கிறார். அது மட்டும் அல்லாமல் இந்திய அணிக்காக 23 டெஸ்ட் போட்டிகளிலும் நான்கு ஒருநாள் போட்டிகளிலும் சிவ சுந்தர் விளையாடியிருக்கிறார். இந்தக் குழுவில் அதிக டெஸ்ட் போட்டிகளை விளையாடிய முன்னாள் வீரர் என்ற அனுபவம் சிவசுந்தர் தாஸ்க்கு இருப்பதால் அவரை தற்காலிக தலைவராகவும் அதன்பிறகு நிரந்தர தலைவராகவும் நியமிக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.